உலகம்

லாசரஸ் சக்வேரா மலாவி நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று இன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த தேர்தல் வாக்கெடுப்பில் சக்வேரா 58.57% வாக்குகளைப் பெற்று முன்னால் பதவியில் இருந்த பீட்டர் முத்தாரிகாவை தோற்கடித்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மலாவியின் அரசியலமைப்பு நீதிமன்றம், 2019 மே மாதம் நடாத்தப்பட்ட தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அப்போது வாக்கெடுப்பில் முன்னனியில் நின்ற பீட்டர் முத்தரிக்காவின் வெற்றியை ரத்து செய்தது.
மீண்டும் இந்த வாரம் தேர்தலுக்கு முன்னதாக நாடு கடுமையாக பிளவுபட்டது.

உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் தேர்தலை நடத்துவதற்கான குறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்தல் நடைபெற்றது.. பதவியேற்கும் ஜனாதிபதி சக்வேரா மலாவி நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் மதகுருவும் ஆவார். அவர் எதிர்க்கட்சியான மலாவி காங்கிரஸ் கட்சிக்கு (எம்.சி.பி) தலைமை தாங்குவது குறிப்பிடதக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.