உலகம்

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருப்பதாகவும் அதில் பலர் பலியானதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை நான்கு பேர் கொண்ட குழு ஒன்று வாகனத்திலிருந்து வெளியேறி பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்குச்சந்தை அலுவலகத்தினுள் கையேறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் இதில் இருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவ்விடம் நோக்கி விரைந்த பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய நால்வரையும் சுட்டு கொன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து சிந்து முதலமைச்சர் முராத் அலி ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.