உலகம்

Worldometer இணையத் தளத்தின் அண்மைய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 10 258 151
மொத்த இறப்புக்கள் : 504 613
குணமடைந்தவர்கள் : 5 563 040
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 190 498
குணமடைந்தவர்கள் : 57 346

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 637 077 : மொத்த இறப்புக்கள் : 128 437
பிரேசில் : 1 345 254 : 57 658
ரஷ்யா : 641 156 : 9166
இந்தியா : 549 197 : 16 487
பிரிட்டன் : 311 151 : 43 550
ஸ்பெயின் : 295 850 : 28 343
பெரு : 279 419 : 9317
சிலி : 271 982 : 5509
இத்தாலி : 240 310 : 34 738
ஈரான் : 222 669 : 10 508
பாகிஸ்தான் : 206 512 : 4167
ஜேர்மனி : 194 864 : 9029
பிரான்ஸ் : 162 936 : 29 778
சீனா : 83 512 : 4634
சுவிட்சர்லாந்து : 31 617 : 1962
இலங்கை : 2037 : 11

இரு நாட்களுக்கு முன்பு உலகளாவிய கொரோனா தொற்றுக்கள் 1 கோடியை (10 மில்லியன் அல்லது 100 இலட்சம்) கடந்திருந்தன. ஜூன் 21 ஆம் திகதி 9 மில்லியனைக் கடந்திருந்த இந்தத் தொற்றுக்கள் வெறும் 6 நாட்களுக்குள் ஒரு மில்லியனாக அதிகரித்து ஒரு கோடியை எட்டியுள்ளது. இது கடந்த மில்லியன்களுக்கான இடைவெளிகளிலேயே அதிகபட்ச வேகமாகும். உலகளாவிய ரீதியில் மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்தைக் கடந்துள்ளன.

மொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடுகையில், உலகளவில் கொரோனா தொற்றுப் பாதித்த நூறு பேரில் 5 பேர் அதாவது 5% விழுக்காடு பலியாகி உள்ளனர். இதே சதவீதம் கொரோனா பரவத் தொடங்கிய போது 3% வீதத்துக்கும் குறைவாக இருந்தது.

நாடுகள் அடிப்படையில் அமெரிக்கா, 2.6 மில்லியனுக்கும் (26 இலட்சம்) அதிகமான தொற்றுக்களுடனும், 1 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களுடனும் முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 1.3 மில்லியனுக்கும் (13 இலட்சம்) அதிகமான தொற்றுக்களுடனும், 57 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களுடனும் 2 ஆவது இடத்திலும், ரஷ்யா 3 ஆவது இடத்திலும், இந்தியா 4 ஆவது இடத்திலும் உள்ளன.

அமெரிக்காவிலும், பிரேசிலிலும் தினசரி தொற்றுக்கள் சமீப நாட்களாக 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதேவேளை கொரோனாவுக்கான தடுப்பு மருந்து விரைவில் கடைப்பிடிக்கப் படும் என்றும் ChAdOx1nCoV-19 என்ற மருந்து தொடர்பான பரிசோதனை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் உலக சுகாதாரத் தாபனமான WHO நம்பிக்கை தெரிவித்துள்ளது.

AZD11222 என்றும் அழைக்கப் படும் இந்த மருந்தை AstraZeneca என்ற நிறுவனம் தயாரித்து வந்த நிலையில் மனிதர்கள் மீதான இறுதிக் கட்டப் பரிசோதனையில் இது இருப்பதாக உலக சுகாதாரத் தாபனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். பிரிட்டன், தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலை சேர்ந்த சுமார் 10 260 பேருக்கு வழங்கப் பட்டு இந்த மருந்து பரிசோதிக்கப் படவுள்ளதாக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுதவிர மாடர்னா என்ற பிரசித்தமான இன்னொரு மருந்து நிறுவனமும் mRNA 1273 என்ற தடுப்பு மருந்தை உருவாக்குவதில் கடும் முயற்சி செய்து வருகின்றது. AstraZeneca நிறுவனமோ இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து கிட்டத்தட்ட 40 கோடிக்கு வழங்கப் பட முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வரைபடம் : Worldometer

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.