உலகம்

டொக்லாம் சர்ச்சை போன்ற பல விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நாடான ஜப்பானுடன் இணைந்து இந்திய கடற்பட்டை தனது கூட்டு இராணுவப் பயிற்சியை அல்லது போர் ஒத்திகையை நடத்தியுள்ளது.

இது சீனாவுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. சனிக்கிழமை இந்திய மற்றும் ஜப்பானிய யுத்தக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் கூட்டு இராணுவப் பயிற்சியை நடத்தின.

இதில் இரு நாடுகளினதும் தலா இரு யுத்தக் கப்பல்கள் என மொத்தம் 4 யுத்தக் கப்பல்கள் பங்கு பற்றின. இந்தக் கூட்டு இராணுவப் பயிற்சியானது இரு நாட்டினதும் இராஜதந்திர உறவினை வலுப்படுத்தும் அடையாளமாக நிகழ்த்தப் பட்டது என ஜப்பானிய கடற்படை தற்காப்புப் படைப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் இந்தியாவும், ஜப்பானும் கடற்படைப் பயிற்சிகளை நிகழ்த்தி இருந்த போதும், இம்முறை நிகழ்த்தப் பட்ட பயிற்சியானது லடாக்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ஏற்பட்ட இராணுவ முறுகலை அடுத்து நடத்தப் பட்டிருப்பது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகின்றது.

சில தினங்களுக்கு முன்பு ஜப்பான் போர்க் கப்பல்கள் அமெரிக்க கடற்படையுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சீனாவுக்கும், ஜப்பானுக்கும் உட்பட்ட கடற்பகுதியில், சில தீவுகளின் உரிமை தொடர்பில் இரு நாட்டுக்கும் இடையே பிணக்கு இருந்து வருகின்றது. இந்நிலையில் லடாக் மோதலில் உயிரிழந்த இந்திய இராணுவ வீரர்களுக்குத் தனது அனுதாபத்தைத் தெரிவித்திருந்த ஜப்பான், சீன தரப்பு இழப்பு குறித்து எதுவும் பேசவில்லை.

உலகளவில் அணுவாயுத ஆற்றல் அற்ற ஆனால் மிகச்சிறந்த தொழிநுட்பத்திறன் மிக்க நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.