உலகம்

இந்த மாதம் வடக்கு ஐரோப்பாவின் வான் பரப்பில் மர்மமான முறையில் திடீர் கதிர்வீச்சு அளவு அதிகரித்திருப்பதாக ஐரோப்பாவின் பல நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆனால் இதற்கான பொறுப்பு எந்தவொரு அணுசக்தி நிலையத்தினாலும் இதுவரை ஏற்கப்படவில்லை.

மனிதர்களையும், சூழலையும் மிகத் தீவிரமாகப் பாதிக்கக் கூடிய கதிர்வீச்சு அளவுக்கு இது உயர்வல்ல என்றும் கூறப்படுகின்றது. நோர்வே மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த கதிர்விச்சுப் பாதுகாப்பு அதிகாரிகளாலும் இது அவதானிக்கப் பட்டுள்ளது. இக்கதிர்வீச்சின் பெரும் பங்கு ரஷ்யாவுக்கு உட்பட்ட வான் பரப்பிலும், சில பகுதிகள் பின்லாந்து, சுவீடன், டென்மார்க் மற்றும் நோர்வே போன்றவற்றுக்கு மேலாகவும் கூடக் காணப்படுகின்றது.

இந்தக் கதிர்வீச்சில் காணப்படும் ஐசோடோப்புக்கள் மனிதர்களின் அணுசக்தி நிலையங்களில் இருந்து வெளிவரக் கூடியவை தான் என்றும் இனம் காணப் பட்டுள்ளது. அநேகமாக மேற்கு ரஷ்யாவில் உள்ள அணுமின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளால் தான் வட ஐரோப்பிய வளி மண்டலத்தில் இந்தத் திடீர் அணுக் கதிரியக்கத்தின் தன்மை அதிகரித்திருக்கக் காரணம் என பல ஐரோப்பிய நாடுகள் முக்கியமாக நெதர்லாந்து குற்றம் சாட்டியுள்ளது. இக்குற்றச்சாட்டை ரஷ்யாவின் Rosenergoatom என்ற அணுமின்னிலையங்களை இயக்கும் அமைப்பு மறுத்துள்ளது.

தாம் அனைத்து அணுமின் நிலையங்களையும், கதிர்வீச்சுத் தன்மையையும் கண்காணித்து வருகின்றோம் என்றும் வழக்கத்துக்கு மாறாக எந்த அளவீடும் பதிவாகவில்லை என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை வட ஐரோப்பிய வளிமண்டலத்தின் அணுக் கதிர் வீச்சு அளவு இனியும் அதிகரித்தால் மிகப் பெரும் பாதிப்பு வரும் என கதிர்வீச்சுப் பாதுகாப்பு அமைப்புக்கள் எச்சரித்துள்ளன.

1986 இல் இன்றைய உக்ரைனில் முன்பு சோவியத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருந்த செர்னோபில் அணு உலையில் மனிதத் தவறு காரணமாகவும், அணு உலைக் குறைபாடு காரணமாகவும் உலகின் மிகப் பெரிய கதிர்வீச்சு விபத்து ஏற்பட்டிருந்தது. இதில் 2000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததுடன், இலட்சக் கணக்கானவர்கள் பாதிக்கப் படவும் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வீடுகளில் நிகழும் உயிரிழப்புக்களைத் தடுப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

மஹர சிறைச்சாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வன்முறையை அடுத்து தமது வைத்தியசாலைக்கு 6 சடலங்கள் எடுத்து வரப்பட்டதாக ராகம வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் வங்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் டெல்லியை நோக்கி விவசாயிகள் 2வது நாளாக பேரணி மேற்கொண்டுள்ளனர். இதனால் டெல்லியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாலியின் சுகாதார அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வழங்கிய சோதனை தரவுகளின் படி, கடந்த 14 நாட்களில் நாடு முழுவதும் , கோவிட் -19 வைரஸ் தொற்று வீதம் குறைந்திருப்பதனால், மூன்று சிவப்பு மண்டலங்கள் மற்றும் இரண்டு ஆரஞ்சு மண்டலங்களில் இந்த வார இறுதியில் அதாவது இன்று ஞாயிறு முதல் பாதுகாப்பு விதிகள் தளர்த்தப்படும்.

சுவிற்சர்லாந்தில் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அடுத்து வரும் இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று சுவிஸ் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் தெரிவித்துள்ளார். சென்ற வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில், பெர்செட் இதனைத் தெரிவித்துள்ளார்.