உலகம்

சுவிற்சர்லாந்தில் சர்வதேச முக்கியத்துவம் மிக்க கண்காட்சியும், ஜெனிவா மாநிலத்தின் அடையாளமும், அதிக பொருளாதாரச் சுழற்றி நிறைந்ததுமான, ஜெனிவா மோட்டார் கண்ணகாட்சியின் 2021ம் ஆண்டுக்கான நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவத் தொடங்கிய நிலையில் இந்த (2020) ஆண்டு இக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. தற்போது கண்காட்சி அமைப்பாளர்கள் 2021 பதிப்பையும் ரத்து செய்வதாக நேற்றைய தினம் அறிவித்துள்ளனர்.

வாகனத் தொழில்துறையில் ஒரு முக்கிய நிகழ்வான ஜெனீவா சர்வதேச மோட்டார் கண்காட்சியை நடத்தும் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு, கண்காட்சி அரங்கப் பங்கேற்பாளர்கள் மத்தியில் நடத்திய வாக்கெடுப்புக்குப் பின்னர் 2021 பதிப்பை ஏற்பாடு செய்யும் யோசனையை கைவிட்டுவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.

வடக்கு ஐரோப்பாவில் கண்டறியப் பட்ட திடீர் மர்ம கதிர்வீச்சு அபாயம்!

"பெரும்பான்மையான வாகன உற்பத்தியாளர்கள், 2021 பதிப்பில் பங்கேற்கமாட்டார்கள் என்றும் 2022 பதிப்பில் பங்கேற்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது. வாகனத்துறை தற்போது பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அதிலிருந்து மீளவும், கண்காட்சி நிகழ்ச்சியில் முதலீடு செய்யவும் கால அவகாசம்தேவை என, மேற்படி கண்காட்சியின் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மேலும் சராசரி 600,000 பார்வையாளர்களையும் 10,000 பத்திரிகையாளர்களையும் ஈர்க்கும் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வதற்கு, அடுத்த மார்ச் மாதத்தில் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிலைமை அனுமதிக்குமா என்பதும் தெளிவாக இல்லை என்பதனையும் அறக்கட்டளை சுட்டிக்காட்டியுள்ளது.

டிக் டோக் உட்பட 59 சீன செயலிகள் இந்தியா முழுவதும் முடக்கம்!

இந்த ஆண்டு நடைபெறவிருந்த 2020 பதிப்பு, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடைசி நிமிடத்தில் ரத்துசெய்யப்பட்டபோது, 11 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை (11.6 மில்லியன் டாலர், 10.3 மில்லியன் யூரோக்கள்) பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய நிதி உதவி வழங்குமாறு மார்ச் மாதத்தில் ஜெனீவா மாநில அரசைக் கேட்டுக் கொண்டதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய பொது நிகழ்வான இக் கண்காட்சி, ஜெனீவா பிராந்தியத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 மில்லியன் பிராங்குகளை ஈட்டித் தருவதையும் அறக்கட்டளை சுட்டிக்காட்டியது.

ஜூன் மாதத் தொடக்கத்தில், ஜெனீவா மாநில அரசாங்கம் 16.8 மில்லியன் பிராங்க் கடனுக்கு ஒப்புதல் அளித்த போதும், திருப்பிச் செலுத்தும் நிபந்தனைகள் மற்றும் 2021 ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வை நடத்த வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக அது நிராகரிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.