உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 10 508 409
மொத்த இறப்புக்கள் : 510 903
குணமடைந்தவர்கள் : 5 728 449
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 269 057
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 57 720

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 704 308 : மொத்த இறப்புக்கள் : 129 170
பிரேசில் : 1 383 678 : 58 927
ரஷ்யா : 647 849 : 9320
இந்தியா : 585 792 : 17 410
பிரிட்டன் 312 654 : 43 730
ஸ்பெயின் : 296 351 : 28 355
பெரு : 282 365 : 9504
சிலி : 279 393 : 5688
இத்தாலி : 240 578 : 34 767
ஈரான் : 227 662 : 10 817
பாகிஸ்தான் : 209 337 : 4304
ஜேர்மனி : 195 688 : 9044
பிரான்ஸ் : 164 801 : 29 843
சீனா : 83 531 : 4634
சுவிட்சர்லாந்து : 31 714 : 1963
இலங்கை : 2047 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் கொரோனா தொற்றுக்கள் 1 கோடியே 5 இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், இறப்புக்கள் 5 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில், 27 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 29 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன்.

அதற்கடுத்து 2 ஆவது இடத்தில் பிரேசிலில் 13 இலட்சத்து 83 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 58 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. 3 ஆவது இடத்தில் ரஷ்யாவும், 4 ஆவது இடத்தில் இந்தியாவும் காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்த தொற்றுக்கள் 5 இலட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், இறப்புக்கள் 17 ஆயிரத்துக்கு அதிகமாகவும் உள்ளன.

அண்மையில் கொரோனா வைரஸின் மிக மோசமான தாக்கம் இனித்தான் ஏற்படவுள்ளது என உலக சுகாதாரத் தாபனத்தின் தலைவர் டெட்ராஸ் அதொனொம் எச்சரித்துள்ளார். இப்போதிருக்கும் சூழலில் உலக அரசாங்கங்கள் ஒன்றுபட்டு சரியான கொள்கைகளை செயற்படுத்தத் தொடங்கவில்லை என்றால் இந்த வைரஸ் தாக்கம் இன்னும் பலரைப் பாதிக்கக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் பாதியளவுக்கும் அதிகமான கொரோனா தொற்றுக்கள் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மாத்திரமே ஏற்பட்டுள்ள நிலையில், இது தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவையும் கூட அதிகம் பாதித்துள்ளது.

ஆனால் முறையான நடவடிக்கைகளால் நியூசிலாந்து போன்ற நாடுகள் இதிலிருந்து மீண்டுள்ளன. இந்நிலையில், கடினமான உண்மை யாதெனில் கொரோனா முடிவடைவதற்கான சூழல் தற்போது அருகில் இல்லை என்பதே ஆகும் என்றும் அதொனொம் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார். 

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சுமார் நான்கு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

இந்தியாவின் வேகமெடுத்திருக்கும் கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் 22,772பேர் பாதிப்படைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிலிருந்து மின் சாதனங்களை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.