உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 10 693 141
மொத்த இறப்புக்கள் : 516 426
குணமடைந்தவர்கள் : 5 857 433
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 319 282
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 57 768

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 751 932 : மொத்த இறப்புக்கள் : 130 395
பிரேசில் : 1 426 913 : 60 194
ரஷ்யா : 654 405 : 9536
இந்தியா : 604 808 : 17 848
பிரிட்டன் : 313 483 : 43 906
ஸ்பெயின் : 296 739 : 28 363
பெரு : 285 213 : 9677
சிலி : 282 043 : 5753
இத்தாலி : 240 760 : 34 788
ஈரான் : 230 211 : 10 958
பாகிஸ்தான் : 213 470 : 4395
ஜேர்மனி : 195 998 : 9053
பிரான்ஸ் : 165 719 : 29 861
சீனா : 83 534 : 4634
சுவிட்சர்லாந்து : 31 851 : 1965
இலங்கை : 2054 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில், தொற்றுக்கள் 1 கோடியே 6 இலட்சத்து 93 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், இறப்புக்கள் 5 இலட்சத்து 16 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. சர்வதேச அளவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் போட்டி இடம்பெற்று வருகையில், இந்தியாவின் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்து மனிதர்களிடையே பரிசோதிப்பதற்குத் தயாராகி விட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

பாரத் பயோடெக் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப் பட்டுள்ள கோவாக்ஸின் என்ற இம்மருந்து ஜூலையில் பரிசோதிக்கப் படும் என இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் அறிவித்துள்ளார். சுமார் 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட கொரோனாவால் அதிகளவு பாதிக்கப் பட்டுள்ள 4 ஆவது நாடான இந்தியாவில் சற்று நம்பிக்கை அளித்திருக்கக் கூடிய முதல் மருந்து இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தடுப்பு மருந்தை இந்தியாவின் வைரலாஜி மருத்துவ ஆராய்ச்சி தேசிய ஆய்வக கவுன்சிலும் இணைந்து தயாரித்துள்ளது. 2019 டிசம்பர் முதற்கொண்டு உலகை மிகத் தீவிரமாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை முற்றிலும் தடுத்து நிறுத்தக் கூடிய தடுப்பு மருந்து எதுவும் இதுவும் இறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.