உலகம்

சீன நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஹாங்கொங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதன் மூலம் ஹாங்கொங்கின் தன்னாட்சி அதிகாரம் முற்றிலும் ஒழிக்கப் பட்டு விட முடியும் என விமரிசகர்கள் எச்சரித்துள்ளனர்.

மேலும் பல சர்வதேச நாடுகளும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

தேசிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் ஹாங்கொங்கில் இதுவரை 300 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். சீனாவின் இந்த அரசியல் நகர்வுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், 3 ஆம் தரப்பு நபர் எமது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடத் தேவையில்லை என சீனா கோபத்துடன் பதில் உரைத்துள்ளது.

சீனாவின் இப்புதிய சட்டத்துக்கு ஹாங்கொங்கின் ஜனநாயக சார்பு எம்பிக்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1997 ஆமாண்டு ஹாங்கொங் சீனாவிடம் இங்கிலாந்தால் கையளிக்கப் பட்டதில் இருந்து சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஜனநாயக வழியிலான போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவே சீன அரசு சமீபத்தில் இந்த தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகப் பெருமளவில் கருதப் படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.