உலகம்

அண்மையில் ஏற்பட்ட நெஞ்சு வலியை அடுத்து காத்மண்டு கங்காலால் தேசிய இருதய மையத்தில் அனுமதிக்கப் பட்டுள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி விரைவில் பணிக்குத் திரும்புவார் என்றும் அதன் பின் மக்களிடம் பேசுவார் என்றும் அவரின் செய்தி ஆலோசகர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

எனினும் பிரதமர் சர்மா ஒலிக்கு அரசியல் நெருக்கடிகள் முற்றியிருப்பதாகவும், விரைவில் அவர் பதவியை இழக்கக் கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமர் பதவியில் இருந்து தம்மை நீக்க இந்தியா மறைமுகமாக வேலை செய்கின்றது என பிரதமர் சர்மா ஒலி குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இவருக்கு எதிராக நேபாளத்தின் ஆளும் கம்யூனிசக் கட்சி மூத்த தலைவர்கள் கொடி பிடித்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை பதவியை ராஜினாமா செய்யுமாறு சர்மா ஒலிக்கு இவர்கள் நெருக்கடி அளித்தனர். இவரை அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஆளும் கட்சி அழைப்பு விடுத்த போதும் அதனை சர்மா ஒலி நிராகரித்துள்ளார்.

புதன்கிழமை இவ்விவகாரம் தொடர்பில் சர்மா ஒலி ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசியுள்ளார். சீனாவுடன் மறைமுகமாக கைகோர்த்துக் கொண்டு எல்லை வரைபட விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராகச் செயற்பட்டதன் விளைவாகவே ஆளும் கம்யூனிசக் கட்சியில் பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. முக்கியமாக இறுதியாக நடந்த கம்யூனிசக் கட்சியின் நிலைக்குழு கமிட்டி கூட்டத்தில் மொத்தம் இருந்த 44 உறுப்பினர்களில் 31 உறுப்பினர்கள் சர்மா ஒலிக்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.