உலகம்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் 2 ஆவது ஆட்சிக் காலத்தின் பதவிக் காலம் 2024 ஆமாண்டுடன் நிறைவுறுகின்றது.

இதுவரை அமுலில் இருக்கும் ரஷ்ய அரசியல் சாசனப் படி அந்நாட்டில் இருமுறைக்கு மேல் ஒருவர் அதிபராகப் பதவியை வகிக்க முடியாது. 2012 இல் ரஷ்ய அதிபராக முதன் முறை பொறுப்பேற்ற விளாதிமிர் புதின் தற்போது 2 ஆவது முறையாகப் பதவி வகித்து வருகின்றார்.

இவர் 2024 இல் முடிவடையும் தனது பதவிக் காலத்தை மேலும் 12 ஆண்டுகளுக்கு இரு முறை நீட்டிக்கக் கூடிய வகையில் சட்ட திருத்தத்தைக் கொண்டு வர முடிவெடுத்தார். இந்த சட்ட திருத்தத்திற்கு மக்களின் ஒப்புதலைப் பெற வாக்கெடுப்பு அண்மையில் நடத்தப் பட்டது. இதில் இதுவரை எண்ணப் பட்ட 87% சதவீத வாக்குகளில் 77% சதவீதமானவர்கள் புதினுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் அதிபர் விளாதிமிர் புதின் 2036 ஆமாண்டு வரை ரஷ்யாவின் அசைக்க முடியாத அதிபராகப் பதவி வகிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.