உலகம்

பாகிஸ்தானில் ரயில் ஒன்றின் மீது வேன் மோதியதில் சீக்கிய யாத்ரீகர்கள் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தானில் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கிச்சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்றின் மீது சீக்கிய யாத்ரீகர்கள் சென்ற வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

பாரூகாபாத் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த பயங்கர விபத்தில் வேனில் பயணம் செய்த 19 பேர் பலியானதாகவும் 9 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அதில் 5பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இறந்த சீக்கிய யாத்ரீகர்களுக்கு தமது இரங்கல் செய்தியை பதிவு செய்துள்ளார்.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு வெளியாகியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, நேரடி வகுப்புகளாக இல்லாமல், இணையவழிக் கல்வி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லை என்பது, உண்மையான கட்டுப்பாட்டு கோடு அல்லது எல்.ஓ.சி என்று அழைக்கப்படுகிறது, அதாவது இவ்விரு நாடுகளுக்கும் இடையே நடந்த 1962 போருக்குப் பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இவ்விருநாடுகளும் அமைத்துக்கொண்ட எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அது.

ஐ.நா சபைக்கான அமெரிக்கத் தூதராக மூத்த தூதரக அதிகாரியும், கருப்பினத்தைச் சேர்ந்தவருமான 68 வயதாகும் லிண்டா தோமஸ் கிரீன்பீல்டு என்பவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடென் நியமித்துள்ளார்.

கடந்த சில தசாப்தங்களில் இல்லாதவாறு இஸ்ரேல் அரசானது ஒரு பாரிய இரகசிய அணுவாயுத செயற்திட்டத்தை முன்னெடுத்து வருவதாக AP ஊடகம் செய்மதிப் புகைப் படங்களது ஆதாரத்தை சுட்டிக் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.