உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 11 217 436
மொத்த இறப்புக்கள் : 529 554
குணமடைந்தவர்கள் : 6 363 696
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 324 186
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 58 814

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 891 124 : மொத்த இறப்புக்கள் : 132 106
பிரேசில் : 1 543 341 : 63 254
ரஷ்யா : 674 515 : 10 027
இந்தியா : 650 431 : 18 669
ஸ்பெயின் : 297 625 : 28 385
பெரு : 295 599 : 10 226
சிலி : 288 089 : 6051
பிரிட்டன் : 284 276 : 44 131
மெக்ஸிக்கோ : 245 251 : 29 843
இத்தாலி : 241 184 : 34 833
ஈரான் : 235 429 : 11 260
பாகிஸ்தான் : 225 283 : 4619
ஜேர்மனி : 197 000 : 9073
பிரான்ஸ் : 166 960 : 29 893
சீனா : 83 545 : 4634
சுவிட்சர்லாந்து : 32 101 : 1965
இலங்கை : 2069 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 12 இலட்சத்து 7 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 29 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 28 இலட்சத்து 91 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன், 1 இலட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

2 ஆவது இடத்தில் பிரேசிலில், 15 இலட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன், 63 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. 3 ஆவது இடத்தில் 6 இலட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் ரஷ்யாவும், 4 ஆவது இடத்தில் 6 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் இந்தியாவும் காணப்படுகின்றன. இந்தியாவில் 18 ஆயிரத்து 669 உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை டிசம்பரில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவியது தொடர்பான முதலாவது அறிவிப்பை சீன அரசு மேற்கொள்ளவில்லை என்றும் நாமே முதலில் அறிவித்தோம் என்றும் சீனாவில் இயங்கி வந்த உலக சுகாதார அமைப்பின் பிரிவு தெரிவித்துள்ளது. பல சர்வதேச நாடுகளின் குற்றச்சாட்டையும் மீறி உலகத்துக்கு நாம் ஆரம்பம் முதற்கொண்டே எதையும் மறைக்கவில்லை என்று சீனா தெரிவித்து வந்தது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் இந்தத் தகவல் சீனா மீதான நம்பகத் தன்மையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

ஏற்கனவே சீனாவுடன் சேர்ந்து உலக சுகாதார அமைப்பும் ஆரம்பத்தில் தகவல்களை மறைத்திருந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இன்னும் ஒரு படி மேலே போய் உலக சுகாதாரத் தாபனத்துக்கான அமெரிக்க நிதியுதவியையும் நிறுத்தியும் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

ஜனவரி 3 ஆம் திகதிக்குப் பின் தான் கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்பம் எவ்வாறு கண்டறியப் பட்டது என்ற தகவல்களை சீன அரசு அதிகாரிகள் உலக சுகாதாரத் தாபனமான WHO இற்கு தெரியப் படுத்தியுள்ளனர் என்றும் தற்போது தெரிய வந்துள்ளது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.