உலகம்

மாலியில் தொடர்ச்சியாக சில கிராமங்களில் புகுந்து இனவாத பழங்குடியினர் மேற்கொண்ட தாக்குதலில் 40 பேர் வரை பலியாகியுள்ளனர்.

மாலியின் பேங்கஸ் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் புலானி எனப்படும் பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். கால்நடை மேய்ப்பது தான் இவர்களது பிரதான தொழிலாகும்.

இவர்களுக்கும், டோகன் எனப்படும் ஆயுதம் ஏந்திய வேட்டைக் காரர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வாடிக்கையாகும். இந்நிலையில் சமீபத்தில் பேங்கஸ் மாகாணத்தில் டோகன் இன மக்கள் வசித்து வந்த 4 கிராமங்களுக்குள் திடீரென புகுந்த இனவாத புலானி பழங்குடியின ஆயுததாரிகள் அங்கிருந்தவர்கள் மீது மோசமான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர்.

இந்தத் திடீர் தாக்குதலில் மொத்தம் 40 பேர் வரை உயிரிழந்ததாகத் தெரிய வருகின்றது. இதில் மேலும் பல படுகாயம் அடைந்தனர். இத்தீவிரவாதத் தாக்குதலை அடுத்து பாதுகாப்புப் பணியில் இப்பகுதியில் இராணுவம் குவிக்கப் பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் பல்வேறு தீவிரவாத மற்றும் ஆயுதக் குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இக்குழுக்கள் சிலவேளைகளில் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகள், இராணுவத்தின மற்றும் போலிசாரைக் குறி வைத்தும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

முல்லைத்தீவு தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு விமானப்படையினரின் தாக்குதலில் உயிரிழந்த 54 மாணவிகள் உள்ளிட்ட 61 பேரின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் இருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி; வெளிப்படையாகவும் நேர்மையாகவும் வரி செலுத்துவோரை கௌரவித்தல் எனும் புதிய திட்டத்தை இன்று காணொலி மூலம் ஆரம்பித்துவைத்தார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.