உலகம்

3 மாதத்துக்கும் அதிகமான கடுமையான லாக்டவுன் காலத்தை அடுத்து இங்கிலாந்தில் இன்று சனிக்கிழமை முதற்கொண்டு பப்களும், உணவு விடுதிகளும் திறப்பதற்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது.

சமூக இடைவெளி நடைமுறைகளுடன் உள்ளூர் சினிமாவில் படம் பார்க்கச் செல்வதற்கும், சலூன்களில் முடி திருத்துவதற்கும் கூடப் பொது மக்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

ஐரோப்பாவில் கொரோனாவால் மிக அதிக உயிரிழப்புக்களைச் சந்தித்த நாடு இங்கிலாந்து ஆகும். இங்கு இதுவரை 44 131 பேர் மொத்தம் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்து சற்று அவசரமாகவே அதிகபட்ச தளர்வுகளை மேற்கொண்டுள்ளது என்ற விமரிசனமும் இன்னொரு புறம் எழுந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை மாத்திரம் அங்கு 137 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இந்நிலையில் விஞ்ஞான ஆதாரத்தின் அடிப்படையில் தான் இங்கிலாந்தில் லாக்டவுன் தளர்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று குணமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த 4 நாடுகளான இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய நாடுகள் வேறுபட்ட அளவுகோல்கள்களில் லாக்டவுனை தளர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.