உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 11 388 673
மொத்த இறப்புக்கள் : 533 639
குணமடைந்தவர்கள் : 6 446 054
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 408 980
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 58 489

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 2 935 982 : மொத்த இறப்புக்கள் : 132 318
பிரேசில் : 1 578 376 : 64 365
ரஷ்யா : 674 515 : 10 027
இந்தியா : 674 312 : 19 289
பெரு : 299 080 : 10 412
ஸ்பெயின் : 297 625 : 28 385
சிலி : 291 847 : 6192
பிரிட்டன் : 284 900 : 44 198
மெக்ஸிக்கோ : 252 165 : 30 366
இத்தாலி : 241 419 : 34 854
ஈரான் : 237 878 : 11 408
பாகிஸ்தான் : 228 474 : 4712
ஜேர்மனி : 197 418 : 9081
தென்னாப்பிரிக்கா : 187 977 : 3026
பிரான்ஸ் : 166 960 : 29 893
சீனா : 83 553 : 4634
சுவிட்சர்லாந்து : 32 198 : 1965
இலங்கை : 2074 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த கொரோனா தொற்றுக்கள் 1 கோடியே 13 இலட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 29 இலட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அடுத்த இடத்தில் பிரேசிலில் 15 இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் 64 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

4 ஆவது இடத்தில் ரஷ்யா 6 இலட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடனும், 5 ஆவது இடத்தில் இந்தியாவும் 6 இலட்சத்து 74 ஆயிரத்து 312 தொற்றுக்களுடனும் உள்ளன. இந்தியாவில் மொத்த உயிரிழப்பு 19 ஆயிரத்து 289 ஆகவுள்ளது. கொரோனா எவ்வாறு தோன்றியது மற்றும் அது எவ்வாறு பரவியது போன்ற விபரங்களை அறிய உலக சுகாதாரத் தாபனத்தின் விசேட நிபுணர் குழுவொன்று அடுத்த வாரம் விசாரணைக்காக சீனா செல்லவுள்ளது.

உலக சுகாதாரத் தாபனத்தின் இம்முடிவானது கொரோனா தொற்று தொடர்பில் சீனாவின் மீது சர்வதேசத்தின் பிடி இறுக வழிவகுக்கும் என்றும் கருதப் படுகின்றது. கொரோனா வைரஸ் தொடர்பில் முழுமையாக ஆய்வு நடத்தப் படுவது அவசியம் என உலக சுகாதாரத் தாபனத்தின் மூத்த அறிவியலாளர்களில் ஒருவரான சவுமியா சுவாமி நாதன் என்பவர் தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில், வௌவால்களிடம் காணப்படும் சில வைரஸ்களை கொரோனா வைரஸ்கள் ஒத்திருப்பதாகவும், இது குறித்த தகவல்கள் தெற்காசிய நாடுகளில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாகவும் கூடத் தெரிவித்துள்ளார்.

இதுவரை 500 இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வகைகள் உள்ளதாகவும் தெரிய வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று இந்த நூற்றாண்டின் அதிமுக்கிய சுகாதாரப் பிரச்சினை என்றும் இது திடீரென மாயமாகிப் போய் விடாது என்றும் உலக சுகாதாரத் தாபனம் எச்சரித்துள்ளது. இதேவேளை கொரொனா சிகிச்சைக்காக முன்பு பரவலாகப் பயன்படுத்தப் பட்ட ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் என்ற மலேரியா மருந்து மற்றும் எச் ஐ விக்கான மருந்துகள் இனிமேல் கோவிட்-19 பரிசோதனைகளில் பாவிக்கப் படாது என WHO அறிவித்துள்ளது. மேலும் இந்த மருந்துகளால் கொரோனா உயிரிழப்பு விகிதம் ஒன்றும் குறையவில்லை எனவும் WHO விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் உலகளவில் மிக அதிகபட்சமாக ஒரே நாளில் 2 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றுக்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கொரொனாவுக்கு எதிரான இன்னொரு மருந்தான ரெம்டிஸிவர் இனைப் பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை அளித்திருந்தது.

மறுபுறம் கொரோனா தொற்று மிக உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில், சனிக்கிழமை இடம்பெற்ர சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வெள்ளை மாளிகைக்கு முன்பாக ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.