உலகம்

அண்மைக் காலமாக இந்தியா, தைவான், ஹாங்கொங் மற்றும் திபேத் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் சீனாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில், தென்சீனக் கடற்பரப்பில் 2 போர்க் கப்பல்களை அனுப்பி போர்ப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது அமெரிக்கா.

ஏற்கனவே தென் சீனக் கடற்பரப்பில் சீனாவுடன் புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடையிலும் கடற்பகுதி உரிமை தொடர்பில் சர்ச்சை நீடித்து வருகின்றது.

இப்பகுதியில் இருக்கும் 90% சதவீத கடற்பரப்பு தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றது சீனா. இந்நிலையில் தென் சீன மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியை இணைக்கும் லுசோன் ஜலசந்தி கடற்பரப்பில் 2 அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்கள் சென்றுள்ளது போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சீனாவுக்கு எதிராகவும் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஆதரவாகவும் நாம் படையை அனுப்புவோம் என அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்திருந்தது.

இன்னொரு புறம் தென்சீனக் கடற்பரப்பில் சீனாவும் அண்மைக் காலமாகத் தனது போர்க் கப்பல்களைக் குவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கு விரைந்திருக்கும் இரு அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல்களிலும் 15 இற்கும் அதிகமான போர் விமானங்கள் உள்ளன. இதில் அமெரிக்க விமானப் படை மற்றும் கப்பற்படை இரண்டும் இணைந்து செயற்படத் தயாராகி வருகின்றன. அமெரிக்காவின் இந்த நகர்வை சற்றும் எதிர்பாராத சீனா அதிர்ச்சியடைந்திருப்பதாகவும், போர்ப் பயிற்சிகளைத் தீவிரப் படுத்தியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.