உலகம்

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப் படுத்தப் பட்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷாஹ் மஹ்மூட் குரேஷி ராவல்பிண்டியில் இருக்கும் இராணுவ வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இவர் விரைவில் குணமடைந்து பணிக்குத் திரும்ப வாழ்த்துவதாக சீன வெளியுறவுத் துறை அமைச்சின் பேச்சாளர் ஷாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.

மேலும் மிகவும் பாதுகாப்பாக இருக்குமாறு அவரை வேண்டிக் கொள்வதாகவும் ஷாவோ லிஜியான் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை தனக்கு கோவிட்-19 பாஸிட்டிவ் உறுதி செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்த குரேஷி தனக்குக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து உடனடியாகத் தன்னை தனது இல்லத்தில் தனிமைப் படுத்திக் கொண்டதாகவும் டுவிட்டரில் தகவல் வெளியிட்டிருந்தார்.

உலகளவில் கொரோனா பாதித்த நாடுகளின் வரிசையில், 12 ஆவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தானில் மொத்த 2 இலட்சத்து 28 ஆயிரத்து 474 தொற்றுக்களும், 4712 இறப்புக்களும் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.