உலகம்

சீனாவில் தனது அதிகாரம் மற்றும் கொரோனா பெரும் தொற்று தொடர்பில் அதிபர் ஜின்பிங்கை விமரிசித்து கட்டுரைகள் வெளியிட்ட சட்ட பேராசிரியர் ஒருவரை சீன அதிகாரிகள் திங்கட்கிழமை சிறையில் அடைத்துள்ளனர்.

பீஜிங்கின் புறநகர்ப் பகுதியில் வசித்து வந்த சூ ஷங்ருன் என்ற இப்பேராசிரியரை சுமார் 20 சீன அதிகாரிகள் வந்து அழைத்துச் சென்றதாக அவரின் நண்பர்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இவர் சீன அரசை மிக அரிதாகவே விமரிசனம் செய்து வந்தவர் என்றும் கூறப்படுகின்றது. சீனாவின் பிரசித்தமான த்ஷிங்குவா பல்கலைக் கழகத்தின் சட்டப் பேராசிரியரான இவர் பெப்ரவரியில் வரைந்த கட்டுரை ஒன்றில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவுகை சந்தர்ப்பத்தில் அதிபர் ஜின்பிங்கினால் திணிக்கப் பட்ட தணிக்கை மற்றும் ஏமாற்றும் கலாச்சாரத்துக்கு எதிராக அவர்களை வைதிருந்தார்.

இவர் ஏற்கனவே 2018 ஆமாண்டு ஆன்லைனில் வெளியிட்டிருந்த கட்டுரையில், அந்த ஆண்டு தனது அதிபர் பதவிக்கான கால வரம்பை சீன அதிபர் ஜின்பிங் நீடித்த செயற்பாட்டுக்கு எதிராகவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஹாங்கொங் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் தமக்கு சாதகமாக ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என ஹாங்கொங்கின் ஜனநாயக ஆர்வலரான ஜோஷுவா வொங் தெரிவித்துள்ளார்.

இன்னொரு புறம் உலக அரங்கில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே பகை முற்றியுள்ள நிலையில், பூட்டானுடனும் எல்லைப் பிரச்சினையை கிளறி விட்டுள்ளது சீனா. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 'சீனா பூட்டான் இடையே எல்லை இதுவரை சரியாக வரையறுக்கப் படவில்லை என்றுள்ளது. இதை நாம் பூட்டானுடன் பேசித் தீர்க்கும் திட்டங்களை முன் வைத்துள்ளோம். 1984 முதல் 2016 வரை இந்த எல்லைப் பிரச்சினை தொடர்பில் சீனாவும், பூட்டானும் 24 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இப்பிரச்சினையில் மூன்றாம் நாடு தலையிடத் தேவையில்லை. சீனாவைக் குற்றம் சாட்டவும் முடியாது.' என்று கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.