உலகம்

தெற்காசிய நாடுகளில் இந்தியாவை அடுத்து மிக அதிக கொரோனா தொற்றுக்கள் கொண்ட நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது.

இங்கிருக்கும் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பயில்வோருக்கான வைத்திய சாலையில், கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருக்கும் குறைகளை சுட்டிக் காட்டி 48 மருத்துவர்கள் பதவி துறந்துள்ளனர். இது பாகிஸ்தான் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் கொரோனா தொற்றுக்கு 2 இலட்சத்து 31 ஆயிரத்து 818 பேர் உள்ளாகியும், 4700 பேர் பலியாகியும் உள்ள நிலையில், இந்த மருத்துவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டிருப்பதாக பஞ்சாப் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தமது பதவியைத் துறந்துள்ள வைத்தியர்களில் பெரும்பாலானவர்கள் இளம் டாக்டர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இந்தப் பதவி துறப்பு குறித்து பாகிஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு லாஹூரின் பொது மக்கள் வைத்திய சாலையின் மூத்த டாக்டர் ஒருவர் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

அதில், 'மிகவும் உயிர்கொல்லி வைரஸாக விளங்கும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நாம் திரும்பத் திரும்ப வேண்டிய பல வேண்டுகோள்களை அரசு செவிமடுக்காததால் ஏற்பட்ட நிர்வாகத் தோல்வியும், மிகவும் அத்தியாவசியப் படும் வசதிகள் போதாமையும் தான் நாம் இவ்வாறு ஒரு முடிவெடுக்க வித்திட்டுள்ளது!' என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாகிஸ்தான் அரசு ஆர்வம் காட்டுகின்றதில்லை என்றும் கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் கோவிட்-19 வைரஸினை எதிர்கொள்வதில் முதல் நிலை போர் வீரர்கள் நாமே என்றும் இவர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியான முஷாஃபாரபாட் இல், தமக்குத் தேவையான இந்தப் பாதுகாப்பு வசதிகளைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 இளம் மருத்துவர்களை போலிஸ் கைது செய்திருந்தது. இதையடுத்து இப்பகுதியில் உள்ள வைத்திய சாலைகளில் எமர்ஜன்ஸி வார்டுக்கான தமது பணியை இளம் மருத்துவர்களது கழகம் புறக்கணித்தது.

அரசு கவனம் செலுத்தா விட்டால் இன்னும் பல டாக்டர்கள் பணியைப் புறக்கணிப்பர் என்றும் ஒரு மூத்த டாக்டர் எச்சரித்திருந்தார். இதையடுத்து மருத்துவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு நடைமுறைகள் விரைவில் ஏற்படுத்தப் படும் என பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர் யஸ்மின் ராஷிட் தெரிவித்தார். பல டாக்டர்கள் உட்பட சுமார் 70 மருத்துவ ஊழியர்கள் பாகிஸ்தானில் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். இன்னும் 5000 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியும் இருக்கின்றனர்.

பாகிஸ்தானின் சுகாதாரத்துக்கான தேசிய ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்த 70 மருத்துவ ஊழியர்களிலும் 47 பேர் டாக்டர்கள் என்றும் இதில் 35 டாக்டர்கள் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான 5000 மருத்துவ ஊழியர்களிலும், 3000 மருத்துவர்களும், 600 மருத்துவத் தாதியர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.