உலகம்

அமெரிக்க அரசின் புதிய விசா முடக்கம் தொடர்பான உத்தரவால் அங்கு கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதுடன் இப்புதிய உத்தரவுக்கு எதிர்ப்புக்களும் எழுந்துள்ளன.

சமீபத்தில் அமெரிக்க அரசு ஆன்லைனில் மட்டும் நடத்தப்படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்படுவர் என உத்தரவு பிறப்பித்திருந்தது. வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பான்மை வகிக்கும் இந்திய மாணவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. முன்னதாக வேலைக்கான விசாக்கள் அங்கே நிறுத்திவைத்துள்ள நிலையில் தற்போது மாணவர்களுக்கான விசா முடக்கும் இந்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான கொள்கையில் தீவிரமாக உள்ள அமெரிக்க அதிபர் பலபேருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார் என அமெரிக்க பல்கலைகழக நிர்வாகங்களும் அதிகாரிகளும் இப்புதிய உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் தேவையான உதவிகளை வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.