உலகம்

சுவிற்சர்லாந்தின் மாநிலங்கள் சில இன்று வியாழக்கிழமை முதல் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன.

சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் நோக்கில், சுவிஸின் வடக்கு மாநில அரசுகள் சில, மீளவும் வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளன. பாசல் நகரம், பாசல் நாடு, ஆர்காவ் மற்றும் சொலொத்தூன் ஆகிய மாநில அரசுகள் இதற்கான அறிவிப்பினை நேற்று விடுத்துள்ளன.

இன்று ஜூலை 9 வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் கட்டுப்பாடுகளின் படி, தனியார் விருந்து, உணவகம், இரவு விடுதி அல்லது பிற நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடிய விருந்தினர்களின் அதிகபட்ச அளவு 300 முதல் 100 வரை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிகழ்வுகளில் பங்கேற்கபவர்களின் தொடர்புத் தரவுகள் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகளுக்காக வழங்கபட்டுள்ள ஆகஸ்ட் 31 ஆக இருந்த காலவரையறையை, டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

வார இறுதி இரவுப் பார்ட்டிகளில், பாதுகாப்பு நடவடிக்கை விதிகள் மீறப்படுவதை அவதானித்த அதிகாரிகள், ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை, சூரிச் நகரிலுள்ள ஒரு இரவு விடுதியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளனர்.

சுவிஸ் பார்கள் மற்றும் இரவு விடுதிகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களில், மேலும் பலர் வைரஸ் தொற்றுக்குள்ளான செய்திகள் இப்போது வெளிவந்துள்ளன. இதனால் விடுதிகளின் உரிமையாளர்கள், தாங்கள் பாதிக்கப்படக்கூடும் எனவும், சிலர் தனிமைப்படுத்தப்படுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

சுவிஸ் மத்திய அரசினால் தடை அறிவிக்கப்பட்ட 29 நாடுகளுக்கு, விடுமுறைப் பயணங்களை மேற்கொண்டால், 10 நாட்கள் ஊதியமற்ற தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவேண்டியிருக்கும். மேலும் இது ஒரு சட்ட மீறலாகவும் கவனத்திற் கொள்ளப்பட்டு குற்றவியல் வழக்கினைச் சந்திக்கவும், 5000 முதல் 10 000 சுவிஸ் பிராங்குகள் வரை தண்டம் அறவிடப்படவும் கூடும்.

வைரஸ் தொற்று நிலமை மோசமடைந்தால் நாட்டின் இயல்புநிலையில் மேலும் மாற்றங்கள் கொண்டுவரப்படுமெனவும், எல்லைகளை மூடுவது தொடர்பில் மீண்டும் பரிசீலனை செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.