உலகம்

கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் அதிக ஆபத்து இருப்பதாக அறிவிக்கப்பட்ட 13 நாடுகளுக்கு இத்தாலி தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.

ஆர்மீனியா, பஹ்ரைன், பங்களாதேஷ், பிரேசில், போஸ்னியா, சிலி, குவைத், வடக்கு மாசிடோனியா, மால்டோவா, ஓமான், பனாமா, பெரு மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய 13 நாடுகளில் இருந்து பயணிக்கும் மக்களுக்கு, தனது எல்லைகளை மூடப்பட்டதான இத்தாலிய அரசின் ஆணையினை, இன்று வியாழக்கிழமை இத்தாலியின் சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா தெரிவித்தார்.

இந்தத் தடைப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு நேரடி மற்றும் இணைக்கும் அனைத்து விமானங்களும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார்

இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் ஸ்பெரான்சா பேசுகையில், "உலகெங்கிலும் தொற்றுநோய் மிகக் கடுமையான கட்டத்தில் உள்ளது. சமீபத்திய மாதங்களில் இத்தாலியர்கள் செய்த தியாகங்களை பயனற்றதாக நாங்கள் மாற்ற முடியாது" எனக் குறிப்பிட்டார்.

டாக்காவிலிருந்து ரோம் நகருக்கு பறக்கும் நபர்களுக்கு தொற்றுநோய்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் இத்தாலி பங்களாதேஷுக்கான விமானங்களை நிறுத்தியுள்ளது.

பங்களாதேஷில் இருந்து திரும்பும் ரோம் குடியிருப்பாளர்களில் 30 க்கும் மேற்பட்டவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான ஐரோப்பிய அல்லாத நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தாலி கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. ஆனால் இத்தாலியப் பிரஜைகள் உலகில் வேறு எங்கிருந்தும் இத்தாலிக்குத் திரும்ப அனுமதிக்கப்படும் போது, தரையிறங்கிய இரண்டு வாரங்களுக்கு அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.