உலகம்

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, நாம் நெருக்கமாக இருப்பதேயாகும் என ஐ.நா. சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், உறுப்பு நாடுகளுடனான வாராந்திர மாநாட்டில் தெரிவித்தார்.

உலக சுகாதார நிறுவனத்தை விட்டு அமெரிக்கா வெளியேறும் என்பதை உறுதிப்படுத்திய இரண்டு நாட்களுக்குப் பின் அவர் பேசுகையில், "வைரஸ் பிளவுகளில் செழித்து வளர்கிறது, ஆனால் நாம் ஒற்றுமையாக இருக்கும்போது தடைபடுகிறது. ஆதலால் முன்னோக்கிய ஒரே வழி ஒற்றுமை. ஆதலால் உடல்களை இடைவெளிகளுடனும், உணர்வுகளை நெருக்கமுடனும் வைத்துச் செயற்படவேண்டும்". என்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், "பல ஆண்டுகளாக, ஒரு சுவாச தொற்றுநோயின் பேரழிவு ஆபத்து பற்றி எச்சரித்துள்ளோம். ஆனால் இன்னும் உலகம் அதனை உணரத் தயாராக இல்லை, ”என்று WHO இயக்குனர் குறிப்பிட்டார்.

" பிளவுபட்ட உலகில் இந்த தொற்றுநோயை நாம் தோற்கடிக்க முடியாது. COVID-19 க்கு எதிராகப் போராடும் நாம் அனைவரும் நம்மை கண்ணாடியில் பார்க்க வேண்டும். WHO, உறுப்பு நாடுகள், பதிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் எங்கள் வாழ்க்கையின் போரில் போராடுகிறோம், நாங்கள் சிறப்பாக செய்ய வேண்டும். இப்போது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் கூட. இந்த வகையான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்படாது, எல்லா சாத்தியக்கூறுகளிலும் மிகவும் ஆக்கிரோஷமாக மாறும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்."

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான பதிலை மதிப்பீடு செய்ய WHO ஒரு சுயாதீன குழுவை உருவாக்கியுள்ளது. நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் மற்றும் லைபீரியாவின் முன்னாள் ஜனாதிபதி எலன் ஜான்சன் சிர்லீஃப் ஆகியோர் தலைமை தாங்கும் குழுவின் முதல் அறிக்கை நவம்பரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.