உலகம்

பிரான்சின் இந்த ஆண்டு (ஜுலை 14)  தேசிய தினக் கொண்டாட்டங்கள், கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து அணிதிரண்ட அனைவருக்கும் அர்ப்பணிக்கப்படும் எனப் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

COVID-19 தொற்றுக்கு உள்ளான பிரெஞ்சு மக்களை வரவேற்ற நாடுகளான சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்களாக வரவேற்கப்பட்டு, ஜனாதிபதி கிராண்ட்ஸ்டாண்டில் மரியாதை அளிக்கப்படுவார்கள். இதேபோல் இந்த ஆண்டின் தேசிய விழாவில், மருத்துவ மற்றும் நர்சிங் ஊழியர்களும் மதிப்பளிக்கப்படுவார்கள் எனத் தெரிய வருகிறது.

சென்ற மார்ச் மாதத்திற்கும் ஏப்ரல் தொடக்கத்திற்கும் இடையில், COVID-19 உடன் 52 பிரெஞ்சு நோயாளிகள், சுவிற்சர்லாந்தின் 15 மாநிலங்களில் அமைந்த, சுவிஸ் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். இதனைக் கௌரவிக்கும் வகையில், இந்த ஆண்டின் தேசிய தினக் கொண்டாட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் விடுத்த அழைப்பின் பேரில், பாரிசில் நடைபெறும் தேசிய தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக சுவிஸ் மத்திய கூட்டாட்சி உறுப்பினரும், உள்துறை அமைச்சருமான, அலைன் பெர்செட் ஜூலை 14 ஆம் திகதி பாரிஸ் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விழாவில் கலந்து கொள்ளும் பெர்செட், ஒற்றுமை மற்றும் சுகாதார அமைச்சர் ஆலிவர் வேரன் ஏற்பாடு செய்த மதிய உணவிலும் பங்கேற்பார், இதன் போது அவர் தனது பிரெஞ்சு, ஜெர்மன், லக்சம்பர்க் மற்றும் ஆஸ்திரிய சகாக்களை சந்திப்பார் எனவும், COVID-19 இன் சூழலில் எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் தடுப்பூசி பிரச்சினை போன்ற எதிர்கால சவால்கள் குறித்து உரையாடுவார் என்றும் பத்திரிகைக் குறிப்பு மேலும் கூறுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.