உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 12 495 277
மொத்த இறப்புக்கள் : 559 448
குணமடைந்தவர்கள் : 7 290 198
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 645 631
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 58 770

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 3 250 704 : மொத்த இறப்புக்கள் : 136 158
பிரேசில் : 1 762 263 : 69 316
இந்தியா : 820 014 : 22 135
ரஷ்யா : 713 936 : 11 017
பெரு : 316 448 : 11 314
சிலி : 309 274 : 6781
ஸ்பெயின் : 300 988 : 28 403
பிரிட்டன் : 288 133 : 44 650
மெக்ஸிக்கோ : 282 283 : 33 526
ஈரான் : 252 720 : 12 447
பாகிஸ்தான் : 243 599 : 5058
இத்தாலி : 242 639 : 34 938
ஜேர்மனி : 199 332 : 9126
பிரான்ஸ் : 170 094 : 29 979
சீனா : 83 585 : 4634
சுவிட்சர்லாந்து : 32 690 : 1966
இலங்கை : 2451 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 24 இலட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 59 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 32 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

அங்கு கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 60 000 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. உலகளவில் 2 ஆவது இடத்திலுள்ள பிரேசிலில் 17 இலட்சத்து 62 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 69 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 8 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 22 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

அண்மையில் பிரேசில் அதிபர் பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ள இன்னொரு உலகத் தலைவராக பொலிவியா அதிபர் ஜினைன் அனேஸ் மாறியுள்ளார். தென்னமெரிக்காவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்றான பொலிவியாவில் மே மாதம் நடைபெறவிருந்த அதிபர் தேர்தல் எதிர்வரும் செப்டம்பருக்குத் தள்ளிப் போடப் பட்டுள்ளது. இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும், தனிமைப் படுத்தப் பட்டுள்ளதாகவும், எனினும் தனது பணிகளை அதே நிலையில் தொடர்வேன் என்றும் அதிபர் ஜினைன் அனேஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பொலிவியாவில் சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட 7 அமைச்சர்களுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சிலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் ஆனது சிகிச்சை நடைமுறைகள், அதிகப் படியான கூட்டங்களில் காற்றில் பரவும் தன்மை வாய்ந்தது எனத் தற்போது உலக சுகாதாரத் தாபனம் எச்சரித்துள்ளது.

கொரோனாவின் காற்றில் பரவும் தன்மை குறித்து சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் அளித்த அறிக்கையை நன்கு பரீசிலித்த பின்பே உலக சுகாதாரத் தாபனம் இவ்வாறு எச்சரித்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பால் உலக சுகாதாரத் தாபனம் மருத்துவ பாதுகாப்பு அம்சங்களை மேலும் பலப் படுத்தியுள்ளது. இதனால் உலக மக்களுக்கு இன்னும் சற்று நெருக்கடி அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகியுள்ளது.

கொரோனா காற்றில் பரவக் கூடிய ஆதாரங்கள் வெளியாகி இருப்பதால், இனிமேல் வழிபாட்டுத் தலங்கள், மார்க்கெட்டுக்கள், உணவகங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் என பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இன்னும் விழிப்புணர்வுடன் கட்டாயம் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவ மனைகளிலும் கூட சிகிச்சை அளிக்கப் படும் கருவி உபகரணங்களை இன்னும் சுத்தமாக உபயோகிக்கும் அவசியமும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 26 பேரடங்கிய அமைச்சரவை தற்போது (இன்று புதன்கிழமை) பதவியேற்று வருகின்றது. 

மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது, நாட்டின் முழு நிர்வாகத்தையும் இராணுவத்தின் பிடிக்குள் கொண்டு செல்வதற்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். 

டெல்லி உச்சநீதிமன்றத்தால் பூர்வீக சொத்து உரிமையில் சம பங்கு பெண் பிள்ளைகளும் பெறலாம் எனும் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்தியாவில் பருவமழை காலம் என்பதால் பவானிசாகர் மற்றும் மேட்டூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வடைந்து வருகிறது.

பசுபிக் பெருங்கடலில் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்த இந்தோனேசியா உலகில் நிலநடுக்கங்கள், சுனாமி மற்றும் எரிமலை போன்ற அனர்த்தங்கள் ஒரு வருடத்தில் அதிகளவில் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

அண்மையில் பெய்ரூட்டில் நடந்த வெடி விபத்தை அடுத்து லெபனானில் வெடித்த மக்கள் புரட்சியின் விளைவாக லெபனான் அரசின் பிரதமரான தானும், அமைச்சரவையும் பதவி விலகுவதாக அந்நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தொலைக் காட்சியில் அறிவித்துள்ளார்.