உலகம்

நேபாளத்தின் சமீப நாட்களாகக் கனமழை பெய்து வருகின்றது. இக்கனமழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் அடங்கலாக 12 பேர் பலியாகி இருப்பதாகவும், மேலும் 19 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

போகாரா பகுதியில் உள்ள சாரன்கோட் மற்றும் ஹெம்ஜன் பகுதிகளில் கனமழை காரணமாகக் கடும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அங்கு பல மோசமான நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை அதிகாலை இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியே 12 பேர் உயிரிழந்ததாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த அனர்த்தத்தில் பல வீடுகளும் மண்ணில் புதையுண்டன. ஜஜோர்கோட் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 வீடுகள் முற்றிலும் மண்ணில் புதையுண்டதுடன் 19 பேரை இப்பகுதியில் காணவில்லை என்றும் மொத்தம் 40 பேர் வரை காணவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலச்சரிவுகளால் நேபாலின் மேற்குப் பகுதி சாலைகள் பல சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. தொடர்ச்சியான மழை இன்னும் நீடித்து வருவதுடன் நேபாலின் முக்கிய ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் பல வீடுகள் அடித்து செல்லப் பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் 3 நாட்களுக்கு நேபாலில் கனமழை நீடிக்கும் என அந்நாட்டு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. கனமழை காரணமாக வட இந்தியாவின் சில பகுதிகளிலும் கூட வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

ஒன்பதாவது பாராளுமன்றத்துக்காக இடம்பெற்ற தேர்தலில், வன்னித் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (தமிழரசுக் கட்சி) 3 ஆசனங்களை வென்றுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். 

கொரோனா பெருந்தொற்று உலகளவில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இந்தியாவில் இந்நோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை
19.64 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவின் சென்னை சேமிப்பு கிடங்கில் உள்ள அமோனியம் நைட்ரரேட் வெடிமருந்தை பாதுகாப்பா அப்புறப்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிற்சர்லாந்து மற்றும் பிரான்சிலிருந்து நோர்வே வரும் பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நோர்வே அரசு அறிவித்துள்ளது.

லெபனான் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரெட் வெடித்ததில் 73பேர் பலியாகியுள்ளனர்.