உலகம்

சுமார் $23.11 பில்லியன் டாலர் பெறுமதியான Stealth aircraft எனப்படும் நவீன 105 F-35 ரக போர் விமானங்களை ஜப்பானுக்கு விற்க உடன்பட்டிருப்பதாக அமெரிக்கா வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இது தவிர 63 F-35A எனப்படும் பாரம்பரிய எலெக்ட்ரானிக்ஸ் லேடன் போர் விமானங்களையும், 42 F-35B எனப்படும் விரைவான டேக் ஆஃப் மற்றும் செங்குத்தாக இறங்கக் கூடிய ஏர் கிராஃப்ட் கேரியர் ரக விமானங்களையும் கூட ஜப்பான் கோரியிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தமானது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பிரதான நட்பு நாடான ஜப்பானுடன் பாதுகாப்பினை வலுப்படுத்துவதாக இருக்கும் என வாஷிங்டன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜப்பான் இப்பிராந்தியத்தில் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளக் கூடிய திறனை அதிகரிப்பதும் அவசியம் என்பது அமெரிக்காவின் நல்லெண்ணமாகும் எனவும் அமெரிக்க மாநிலத் திணைக்களம் அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக ஜப்பானுக்கு சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளின் அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதால் 2020 மற்றும் 2021 ஆமாண்டுக்கான ஜப்பானின் பாதுகாப்பு பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடு இதுவரை இல்லாதளவு $50.3 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

இதனால் தனித்திறமை வாய்ந்த போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு உபகரணங்களை நட்பு நாடுகளிடம் இருந்து கொள்வனவு செய்வதில் ஜப்பான் ஆர்வம் காட்டுகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.