உலகம்

கொரோனா நோய்த்தொற்றால்  9,000 ஊழியர்களை குறைக்க உள்ளது என்று எமிரேட்ஸ் விமான நிறுவன தலைவர் கூறியுள்ளார்.

உலகளவில் கொரோனா நோய்ப்ரவல் தீவிரமடைவதால் பலர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுவருகிறது. மத்திய கிழக்கு விமான நிறுவனமான எமிரேட்ஸ் தமது 9000 ஊழியர்களை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பயணச்சேவை அதிகளவான வேலைகள் இழக்கப்படும் என்பதை வெளியிட்டது இதுவே முதல் முறை என செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான நெருக்கடிக்கு முன்னர், எமிரேட்ஸ் 60,000 ஊழியர்களைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எமிரேட்ஸ் விமான நிறுவனம் ஏற்கனவே தனது ஊழியர்களில் பத்தில் ஒரு பகுதியைக் குறைத்துவிட்டதாகக் கூறியுள்ளது. ஆனால் இன்னமும் 15% வீதத்திற்கும் அதிகமானோரை குறைக்கவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் உலகளாவிய விமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, செயல்பாடுகள் அனைத்தும் நிறுத்தப்படாமல் பகுதியளவில் உள்ளன.

ஆனால் அதன் தற்போதைய நிலைமை விமான சேவைகளில் பாரிய திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் 4,500 விமானிகளில் குறைந்தது 700 பேருக்கு இந்த வாரம் பணிநீக்க அறிவிப்புகள் வழங்கப்பட்டன, அதாவது கொரோனா வைரஸ் நெருக்கடி தொடங்கியதிலிருந்து குறைந்தது 1,200 பேர் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர் என கூறப்பட்டுகிறது.

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.