உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 12 743 395
மொத்த இறப்புக்கள் : 565 245
குணமடைந்தவர்கள் : 7 441 143
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 737 007
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 58 713

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 3 328 129 : மொத்த இறப்புக்கள் : 137 159
பிரேசில் : 1 810 691 : 70 623
இந்தியா : 849 823 : 22 687
ரஷ்யா : 720 547 : 11 205
பெரு : 319 646 : 11 500
சிலி : 312 029 : 6881
ஸ்பெயின் : 300 988 : 28 403
மெக்ஸிக்கோ : 289 174 : 34 191
பிரிட்டன் : 288 953 : 44 798
ஈரான் : 255 117 : 12 635
பாகிஸ்தான் : 246 351 : 5123
இத்தாலி : 242 827 : 34 945
ஜேர்மனி : 199 750 : 9132
பிரான்ஸ் : 170 752 : 30 004
சீனா : 83 587 : 4634
சுவிட்சர்லாந்து : 32 798 : 1966
இலங்கை : 2468 : 11

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 27 இலட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 65 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 33 இலட்சத்து 28 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

2 ஆவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 18 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன், 70 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், 8 இலட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் 22 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், இந்தித் திரையுலகப் பிரபலமும், மூத்த நடிகருமான அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாஸிட்டிவ் உறுதி செய்யப் பட்டுள்ளது உலகம் முழுதும் இருக்கும் அவரது கோடிக் கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை நானாவதி மருத்துவ மனையில் நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் அனுமதிக்கப் பட்டுள்ளார். அமிதாப்பின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனைகள் நடத்தப் பட்டுள்ளன.

அமிதாப் பச்சன் அவர்கள் தனது கொரோனா பாதிப்புக் குறித்து டுவிட்டரில் அளித்த செய்தியில், கடந்த 10 நாட்களில் தனக்கு நெருக்கமாக இருந்த அனைவரும் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வேண்டுவதாகத் தெரிவித்துள்ளார். அமிதாப் அவர்கள் கடைசியாக நடித்த 'குலோபா சித்தாவோ' என்ற நகைச்சுவைத் திரைப்படம் கொரோனா தொற்று காரணமாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இத்தாலி, ஸ்பெயின் மற்றும் தென்கொரியாவுக்கு இணையாக மும்பை தாராவி பகுதியில் ஏற்பட்டிருந்த கொரோனா சமூகப் பரவலை வெற்றிகரமாகக் கட்டுப் படுத்தியிருப்பதாக இந்தியாவை உலக சுகாதாரத் தாபன இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் பாராட்டு தெரிவித்துள்ளார். மறுபுறம் கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழுவொன்ரு ஜுலை 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சீனா சென்றடைந்துள்ளது.

இன்னொரு முக்கிய தகவல் : மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவின் கோவிட்-19 என்ற வைரஸை விட புதிய வகை ஆபத்தான நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் ஒன்று பரவி வருவதாக உறுதிப் படுத்தப் படாத தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கஜகஸ்தானில் வசிக்கும் தனது குடிமக்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு சீன அரசு எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.