உலகம்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் சிங்கப்பூரில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி மொத்தமுள்ள 93 ஆசனங்களில், 83 ஐக் கைப்பற்றி பெரும்பான்மை வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சி அமைக்கவுள்ளது.

சுமார் 26.5 இலட்சம் வாக்களர்கள் வாக்களித்து 93 எம்பிக்களைத் தேர்ந்தெடுத்த இந்தத் தேர்தல் மிக அமைதியாகவே நடந்து முடிந்துள்ளது.

14 ஆவது நாடாளுமன்றத் தேர்தலான இத்தேர்தலில், 55 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் நீடித்து வந்த சிங்கப்பூரின் மக்கள் செயல் கட்சி தான் வெற்றி பெற்று இம்முறையும் ஆட்சி அமைக்கின்றது. சிங்கப்பூரின் முதற் பிரதமரும், அந்நாட்டின் சிற்பி என்றும் புகழப்படும் லீ குவான் யூ தான் இக்கட்சியைத் தாபித்தவர் ஆவார்.

இம்முறை வாக்களிப்பு கொரோனா தொற்றுக்கு எதிரான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. அதாவது வாக்களிப்புக்கு வந்த அனைவருக்கும் முகக் கவசங்களும், கையுறைகளும் அளிக்கப் பட்டன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பரபரப்புக்கு மத்தியில் திருகோணமலையில் இன்று சனிக்கிழமை கூடிய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம், சுமூகமான முறையில் முடிவுக்கு வந்துள்ளது. 

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.