உலகம்

கலிபோர்னியாவின் சனச்செறிவு மிக்க சிறைகளில் கொரோனா இலகுவில் பரவும் அபாயம் இருப்பதால் சுமார் 8000 மேலதிக கைதிகளை சிறைகளில் இருந்து விடுவிக்கவிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பெரும் தொற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ள மாகாணங்களில் கலிபோர்னியா ஒன்றாகும்.

கொரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து ஏற்கனவே கலிபோர்னிய சிறைகளில் இருந்து 10 000 பேர் விடுவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது இன்னும் 8000 பேரை விடுவிக்க இருப்பதாக கைதிகள் புனர்வாழ்வுக்கான கலிபோர்னிய திணைக்களம் தெரிவித்துள்ளது. கலிபோர்னியாவின் மிகவும் பழமையான சிறைச்சாலைகளில் ஒன்றான 'சான் குவெண்டின்' இல் கொரோனா தொற்று எழுச்சி அடைந்ததை அடுத்து கைதிகளிடையே அச்சம் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்க அரசின் இம்முடிவை சிறைச்சாலை பொறுப்பு சட்டத் தரணிகள் வரவேற்றுள்ளனர்.

இதுவரை 1000 இற்கும் அதிகமான கலிபோர்னிய சிறைக் கைதிகளிடையே கொரோனா பாஸிட்டிவ் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கலிபோர்னிய சிறைச் சாலைகளில் சுமார் 1 இலட்சத்து 13 ஆயிரம் கைதிகள் வரையுள்ளனர். அமெரிக்காவின் மிகவும் சனச்செறிவு மிகுந்த மாகாணம் கலிபோர்னியா ஆகும். இங்குள்ள மொத்தம் 40 மில்லியன் மக்கள் தொகையில், 3 இலட்சத்துக்கும் அதிகமான கொரோனா தொற்றுக்களும், 6800 இற்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சிக்கு புதியத் தலைமைத்துவம் அவசியம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

புதிய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் போது, மக்கள் மையப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். 

ஆகஸ்ட் 15ஆம் திகதியான இன்று இந்தியாவில் சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் பங்கேற்றதுடன் ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டினையும் இன்று சந்தித்துள்ளார்.

உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்திருக்கும் தடுப்பு மருந்தை பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்க பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் COVID-19 வைரஸ் தொற்றுக்கள் மீண்டும் அதிகரித்து வருவதால், 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கான தடையினை மேலும் ஒரு மாதத்திற்குள் நீட்டிப்பதாக, சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பு புதன் கிழமை அறிவித்துள்ளது.