உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 12 944 337
மொத்த இறப்புக்கள் : 569 347
குணமடைந்தவர்கள் : 7 543 317
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 831 673
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 58 860

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 3 385 377 : மொத்த இறப்புக்கள் : 137 620
பிரேசில் : 1 846 249 : 71 584
இந்தியா : 878 513 : 23 179
ரஷ்யா : 727 162 : 11 335
பெரு : 322 710 : 11 682
சிலி : 312 029 : 6881
ஸ்பெயின் : 300 988 : 28 403
மெக்ஸிக்கோ : 295 268 : 34 730
பிரிட்டன் : 289 603 : 44 819
பாகிஸ்தான் : 248 872 : 5197
இத்தாலி : 243 061 : 34 954
ஜேர்மனி : 199 914 : 9134
பிரான்ஸ் : 170 752 : 30 004
சீனா : 83 594 : 4634
சுவிட்சர்லாந்து : 32 883 : 1968
இலங்கை : 2615 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்தத் தொற்றுக்கள் 1 கோடியே 29 இலட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 69 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 33 இலட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 37 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

2 ஆவது இடத்திலிருக்கும் பிரேசிலில் 18 இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 71 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 3 ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 8 இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 23 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

சனிக்கிழமை FoxNews ஊடகத்துக்கு ஹாங்கொங்கைச் சேர்ந்த வைரலாஜி மற்றும் நோய் எதிர்ப்புத் துறை நிபுணரான லி மெங் யான் என்ற பெண் விஞ்ஞானி அளித்த பிரத்தியேக பேட்டி ஒன்றில் கொரோனா தொற்றின் தன்மை குறித்து ஆரம்ப கட்டத்திலேயே சீனாவுக்குத் தெரியும் என்றுள்ளார். தற்போது அமெரிக்காவில் புகலிடத்தில் இருக்கும் இவர் தனது இருப்பிடத்தைக் குறிப்பிடாது இந்தப் பேட்டியை அளித்தார்.

டிசம்பரிலேயே இதன் தன்மை குறித்த தகவல்களை சீன அரசு வெளிப்படுத்தியிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று கூறிய லி மெங் யான் இந்த வைரஸ் தொடர்பில் ஆரம்ப கட்டத்திலேயே ஆய்வை மேற்கொள்ள ஹாங்கொங் உட்பட சில வெளிநாட்டவர்களுக்கு அனுமதியளிக்க சீன அரசு மறுத்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார். உலக சுகாதாரத் தாபனத்துடன் இணைந்துள்ள தனது சொந்த நிறுவனம் கொரோனா பற்றி மௌனமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப் பட்டதாகவும் இதையடுத்து ஹாங்கொங்கை விட்டு வெளியேறத் தான் முடிவு செய்ததாகவும் லி மெங் யான் தெரிவித்துள்ளார்.

ஏப்பிரல் 28 ஆம் திகதி இவர் அமெரிக்கா வந்தடையாது இருந்திருந்தால் சீன அரசிடம் சிக்கி மோசமாக சிறையில் அடைக்கப் பட்டிருக்க அல்லது காணாமற் போயிருக்க வாய்ப்பிருந்தது என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

வடக்கு மாகாணத்தில் 84 கொரோனா தொற்றாளர்கள் மட்டுமே, கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது சிங்கப்பூரில் இருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிக்கை இன்று வியாழக்கிழமை அல்லது நாளை தமக்கு கிடைக்கும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.