உலகம்

தெற்கு சீனாவின் அன்ஹுய் மற்றும் ஜியாங்ஸி மாகாணங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக யாங்சி நதியில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுவரை வெள்ளத்தில் சிக்கி 140 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளப் பெருக்கு அதிகம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் 3 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. ஏற்கனவெ இந்த அனர்த்தத்தினால், நகர உட்கட்டமைப்புக்கள் சில மோசமாக சிதைவடைந்துள்ள நிலையில், சுமார் 66 000 கோடி ரூபாய் அளவு பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக சீன அரசு கணிப்பிட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் பல நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளதுடன், சாலைகளும், விவசாய நிலங்களும் கடுமையாக சேதமைடந்துள்ளன.

தற்போது இப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை 2 ஆம் நிலைக்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதேவேளை பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் ஃபைர் எனப்படும் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸில் 4.5 ரிக்டர் அளவுடைய மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பாஸ்கோ மற்றும் ககயான் வலே பகுதிகளை மையமாகக் கொண்டு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் குறிப்பிடத்தக்க பொருட் சேதமோ அல்லது உயிரிழப்புக்களோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

பிலிப்பைன்ஸில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 331 குறிப்பிடத்தக்க நில அதிர்வுகள் தாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

“எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவினராகிய நாங்கள் 130க்கும் அதிகமான ஆசனங்களை வெற்றிகொள்வோம்.” என்று பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

“நாட்டு மக்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் அக்கறையுள்ள அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் சர்வதேச விமான சேவை ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆக. 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்திருப்பதாகவும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின், வாட், வலாய்ஸ் மற்றும் ஜெனீவா மாநிலங்களை கொரோனா வைரஸ் தொற்று சிவப்பட்டியலிட்டு, பயணத்தை தடை செய்ய பெல்ஜியம் முடிவு செய்துள்ளது.

9 வருட இடைவெளியின் பின் சொந்த அமெரிக்க மண்ணில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனத்தின் க்ரூ டிராகன் விண்கலம் மூலம் இரு மாதங்களுக்கு முன்பு சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இற்குச் சென்றிருந்த அமெரிக்காவின் விண்வெளி வீரர்கள் இருவரும் தற்போது (ஞாயிறு இரவு இந்திய நேரப்படி) அந்த ஓடத்தின் மூலம் வெற்றிகரமாகப் பூமி திரும்பியுள்ளனர்.