உலகம்

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ரஷ்யா அடுத்த மாதம் முதல் விரைவில் நோயாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவித்திருப்பதாக தெரிகிறது.

ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த மாதம் விரைவில் நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் என்று நம்புவதாக இன்று தெரிவித்துள்ளனர். இதன் தொடர்பாக முதற்கட்ட சோதனையை மாஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவ பல்கலைக்கழகம் மனித தன்னார்வலர்களைப் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனைகளை முடித்ததாககவும் கூறியுள்ளனர்.

செச்செனோவ் முதன்மை மாஸ்கோ மாநில மருத்துவ பல்கலைக்கழகம் ஜூன் மாதத்தில் ஊதியம் பெற்ற 38 தன்னார்வலர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை அறிமுகப்படுத்தியது. அதே நேரத்தில், ரஷ்யாவின் இராணுவம் அதே தடுப்பூசிக்கு இணையாக இரண்டு மாத மருத்துவ பரிசோதனையைத் தொடங்கியது.

ஆகஸ்ட் 12-14 தேதிகளில் இந்த தடுப்பூசி “சிவில் புழக்கத்தில் நுழையும்” என்று நம்புவதாக கமலே மையத்தின் தலைவர் அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க் அந்நாட்டு அரச ஊடகத்திற்கு கூறியுள்ளார். செப்டம்பர் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்கள் வெகுஜன உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

"ஆராய்ச்சி முடிவில் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை இது நிரூபித்திருக்கிறது என்று செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைவரான யெலெனா ஸ்மோல்யார்ச்சுக் தெரிவித்தார்.

செச்செனோவ் பல்கலைக்கழகத்தின் இரண்டு குழுக்கள் தன்னார்வத் தொண்டர்கள் புதன்கிழமை முதல் அடுத்த திங்கட்கிழமை வரையிலான 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் வெளியேற்றப்படுவார்கள். 18 முதல் 65 வயதுடைய தன்னார்வத் தொண்டர்கள் விடுவிக்கப்பட்ட பின்னர் மேலும் ஆறு மாதங்களுக்கு கண்காணிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியாவுக்குப் பிறகு உலகின் நான்காவது மிக அதிகமான கொரோனா வைரஸ் தொற்றுகள் உள்ள நாடாக ரஷ்யா உள்ளன. நாட்டின் விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட 50 வெவ்வேறு தடுப்பூசி திட்டங்களில் பணியாற்றி வருவதாக முன்னர் கூறப்பட்டிருந்தது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு மிக வேகமாக இராணுவ ஆட்சியை நோக்கி செல்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். 

‘வெறுமனே சத்தமிட்டுக் கொண்டிருப்பதல்ல, செயலில் செய்து காட்டுவதே எனது வழி’ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில் முப்படைகளின் அணிவகுப்பு இடம்பெற்றது. முப்படைகளின் அணிவகுப்பு நிறைவுற்றதும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக முன்னேடுக்கப்பட்டு வரும் விவசாயிகளின் டெல்லி போராட்டம் இன்று பிரமாண்ட அளவில் நடத்தப்படுகிறது.

ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொண்டிருந்த போது அதிபர் ஜோ பைடென் சுவிட்சர்லாந்து தயாரிப்பான சுமார் $7000 டாலர் பெறுமதியான றோலெக்ஸ் கடிகாரத்தை அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் தென் சீனக் கடற்பரப்பில் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பல் ரோந்து நடவடிக்கைக்காக நுழைந்ததால் பதற்றம் அதிகரித்தது.