உலகம்

இத்தாலியின் லோம்பார்டியாவில் கொரோனா வைரஸ் தொற்றுத் தவிர்ப்புக்கான நடவடிக்கையில் இதுவரை கட்டாயமாக இருந்த முககவசப் பாவனை விலக்கப்படவுள்ளது.

இனிவரும் நாட்களில், தூரத்தை மதிக்க முடியாத இடங்களில் மட்டுமே வெளிப்புற முககவசங்களில் பாவனை வலியுறுத்தப்படவுள்ளதாக அறிய வருகிறது.

லொம்பார்டியோ பிராந்தியத்தின் அதிபர், அட்டிலியோ ஃபோண்டானா இன்று இதற்கான புதிய பிராந்திய கட்டளையில் கைச்சாத்திடுவார். இதன்மூலம், ஜூலை 15 புதன்கிழமை முதல் லோம்பார்டியா பிராந்தியத்தில், முகமூடியை வெளியில் வைத்திருக்க வேண்டும், ஆனால் ஒருவருக்கொருவர் தொற்று எதிர்ப்பு தூரத்தை உறுதிப்படுத்த முடியாவிட்டால் மட்டுமே பாவிப்பதற்கு வலியுறுத்தப்படும். அதேபோல் மூடிய பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து வழிமுறைகளின்போதும் இது அவசியமாகிறது.

இது இவ்வாறிருக்க, சுவிற்சர்லாந்தின் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் தொழில்முறை பள்ளிகளில், மாணவர்கள் மத்தியில் முககவசப் பாவனை வலியுறுத்த ஆலோசிக்கப்படுவதாகவும், சுவிஸின் மத்திய மாநிலமாகிய லூசெர்ன் இதனை முதலில் நடைமுறைத்தப்படுத்தக் கூடும் எனவும் தெரிய வருகிறது.

லுசேர்னில் விடுமுறைகள் முடிந்து பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கையில் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. தற்போதுவரை இதுகுறித்த பரிந்துரைகள் ஏதும் இல்லாத போதும், விடுமுறையின் பின்னதாக லுசேர்ன் மாநிலம் இதனை அவசியமாக்கும்போது, ஏனைய பிற மாநிலங்களும் இதனை அவசியமாக்குவது தொடர்பில் ஆலோசித்து வருவதாகத் தெரிய வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.