உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 13 363 612
மொத்த இறப்புக்கள் : 578 281
குணமடைந்தவர்கள் : 7 799 981
ஆக்டிவ் தொற்றுக்கள் : 4 985 350
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 59 147

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 3 518 559 : மொத்த இறப்புக்கள் : 138 840
பிரேசில் : 1 895 555 : 73 161
இந்தியா : 936 628 : 24 315
ரஷ்யா : 739 947 : 11 614
பெரு : 330 123 : 12 054
சிலி : 319 493 : 7069
மெக்ஸிக்கோ : 304 435 : 35 491
ஸ்பெயின் : 303 699 : 28 409
தென்னாப்பிரிக்கா : 298 292 : 4346
பிரிட்டன் : 291 373 : 44 968
ஈரான் : 262 173 : 13 211
பாகிஸ்தான் : 253 604 : 5320
இத்தாலி : 243 344 : 34 984
ஜேர்மனி : 200 704 : 9141
பங்களாதேஷ் : 190 057 : 2424
பிரான்ஸ் : 172 377 : 30 029
கனடா : 108 377 : 8796
சீனா : 83 605 : 4634
சுவிட்சர்லாந்து : 33 016 : 1968
இலங்கை : 2665 : 11

இன்றைய புள்ளி விபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 33 இலட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 35 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. அங்கு கடந்த 24 மணித்தியாலத்துக்குள் மிக அதிகபட்சமாக 64 ஆயிரம் கொரோனா தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.

2 ஆவது இடத்திலிருக்கும் பிரேசிலில் 18 இலட்சத்து 95 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 73 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. பிரேசிலில் கடந்த 24 மணித்தியாலத்துக்குள் 20 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப் படுத்தப் படுத்தப் பட்டுள்ளது. 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 9 இலட்சத்து 36 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும் 24 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

உலகளவில் கொரோனா தொற்றுக்களின் வேகம் இப்படியே தொடர்ந்தால் சர்வதேசம் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதாரத் தாபனமான WHO இன் இயக்குனர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இங்கிலாந்தின் கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனா பாதித்து குணமடைந்த பலரிடம் நடத்திய ஆய்வில், இவர்களில் பெரும்பாலானவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி குறை வெகுவாகக் குறைந்திருப்பதாகவும், இவர்களுக்கு எதிர்வரும் குளிர் காலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிக்கும் வாய்ப்பு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.

மேலும் பிரிட்டனில் குளிர் காலத்தில் மீண்டும் கொரோனா தாக்கினால் கிட்டத்தட்ட 1.2 இலட்சம் பேர் இறக்கக் கூடும் என்றும் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.