உலகம்

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றுத் தாக்கம் இருந்தபோதும், சுவிஸின் பீரங்கித் தயாரிப்பு மற்றும் ஆயுத ஏற்றுமதியில் எதிர்மறையான தாக்கம் இல்லையென புள்ளி விபரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில், சுவிட்சர்லாந்து அரை பில்லியனுக்கும் அதிகமான (CHF501 பில்லியன்) பிராங்க் மதிப்புள்ள ஆயுதங்களை ஏற்றுமதி செய்திருப்பதாகவும், இது 2019 உடன் ஒப்பிடும்போது CHF230 இன் பில்லியன் பிராங்குகள் அதிகரிப்பாக உள்ளதாகவும் மேலும் அச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிற்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகம் வெளியிட்ட அரையாண்டு அறிக்கைகளை மேற்கோள் காட்டியே இத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2020 முதல் பாதியில் சுவிட்சர்லாந்திலிருந்து உலகின் 55 நாடுகள் ஆயுதங்களை வாங்கியுள்ளதாகவும், இந்தோனேசியா, டென்மார்க் மற்றும் போட்ஸ்வானா ஆகியவை முக்கிய ஏற்றுமதி இடங்களாக இருந்தன என்று NZZ தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் இராணுவ ஈடுபாட்டைக் குறைப்பதற்காக பிரச்சாரம் செய்யும், க்ரூப் ஃபார் ஐன் ஸ்விஸ் ஓனே ஆர்மீ (ஜிஎஸ்ஓஏ) 'Gruppe für eine Schweiz ohne Armee'(GSOA) அமைப்பு, இச் செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

GSOA ஐச் சேர்ந்த தாமஸ் புருசெஸ் குறிப்பிடுகையில், "தற்போது போரில் இருக்கும் பல நாடுகளுக்கு சுவிட்சர்லாந்து இராணுவ உபகரணங்களை வழங்குகிறது, ஏற்றுமதிகள் பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன என்ற வாதங்கள் ஏற்புடையதாக இல்லை. உதாரணமாக, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு CHF5 மில்லியன் மதிப்புள்ள ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை அனைத்தும் யேமனில் தற்போதைய மோதலின் போது பாவிக்கப்படுகின்றன." எனத் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

வடக்கு மாகாணத்தில் 84 கொரோனா தொற்றாளர்கள் மட்டுமே, கடந்த மார்ச் முதல் இன்று வரையான காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு தற்போது சிங்கப்பூரில் இருக்கும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பான சட்டமா அதிபரின் அறிக்கை இன்று வியாழக்கிழமை அல்லது நாளை தமக்கு கிடைக்கும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.