உலகம்

அமெரிக்காவின் முக்கிய புள்ளிகளின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க நாட்டின் பில்லியனர்கள் ஆன எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட பல முக்கிய நபர்களாக உள்ளனர்.

பராக் ஒபாமா, ஜோ பிடென் மற்றும் கன்யே வெஸ்ட் ஆகியோரின் அதிகாரப்பூர்வ கணக்குகளும் ஹேக் செய்யப்பட்டு பிட்காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சியில் நன்கொடைகள் அனுப்புமாறு கோரியுள்ளன.

"எல்லோரும் என்னை பணம் தரும்படி கேட்கிறார்கள்" என்று ஒரு கணக்கிலிருந்து ஒரு ட்வீட் பதிவு செய்யப்பட்டது. "நீங்கள் $ 1,000 அனுப்புங்கள், நான் உங்களுக்கு $ 2,000 திருப்பி அனுப்புகிறேன்." என மேலும் அந்த ட்வீட்டுக்கள் வெளியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு பதியப்பட்ட ட்வீட்டுக்கள் சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன.

இதன் தொடர்பாக ட்விட்டர் நிறுவனம் இது தனது செயலகர்களை குறிவைத்து "ஒருங்கிணைந்த" தாக்குதலை பிட்காயின் நடத்துவதாக கூறியுள்ளனனர். மேலும் பதில் நடவடிக்கையாக வெரிஃவைட் கணக்குகள் கொண்ட பல ட்விட்டர் கணக்குகளை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியும் உள்ளது.

அதோடு இச்சம்பவம் தொடர்பாக குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவற்றையும் பார்வையிடுங்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ள நிலையில் நாட்டில் அனைத்து மக்களும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பானதாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 

வங்கக் கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதுடன், அடுத்த 12 மணி நேரத்தில் கடும் புயலாக மாறும் வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. 

புரேவி புயல் அனர்த்த நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி; தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்திய வானிலை மையம் அறிவித்துள்ள அறிக்கையின் படி வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் தற்போதைய பெரும் கவலை, நத்தார் புதுவருடக் கொண்டாட்டங்களை எவ்வாறு கோவிட் - 19 வைரஸ் தொற்றுப் பாதுகாப்புக்களுடன் கொண்டாட மக்களை ஒருங்கமைப்பது என்பதாகும்.

ரஷ்யா தனது S-300V4 ரக நவீன ஏவுகணைப் பாதுகாப்பு பொறிமுறையை ஜப்பானின் சர்ச்சைக்குரிய தீவுகளின் தொகுதி அருகே நிலை நிறுத்தியிருப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.