உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 13 810 247
மொத்த இறப்புக்கள் : 589 222
குணமடைந்தவர்கள் : 8 217 073
ஆக்டிவ் தொற்றுக்கள் : 5 003 952
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 59 930

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 3 649 049 : மொத்த இறப்புக்கள் : 140 526
பிரேசில் : 1 978 236 : 75 697
இந்தியா : 1 004 383 : 25 605
ரஷ்யா : 752 797 : 11 937
பெரு : 337 724 : 12 417
சிலி : 323 698 : 7290
மெக்ஸிக்கோ : 317 635 : 36 906
தென்னாப்பிரிக்கா : 311 049 : 4453
ஸ்பெயின் : 304 574 : 28 413
பிரிட்டன் : 292 552 : 45 119
ஈரான் : 267 061 : 13 608
பாகிஸ்தான் : 257 914 : 5426
இத்தாலி : 243 736 : 35 017
ஜேர்மனி : 201 281 : 9148
பிரான்ஸ் : 173 304 : 30 120
கனடா : 109 080 : 8825
சீனா : 83 612 : 4634
சுவிட்சர்லாந்து : 33 290 : 1969
இலங்கை : 2686 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 38 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 89 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 36 இலட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

2 ஆவது இடத்தில் இருக்கும் பிரேசிலில், 19 இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 75 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், 10 இலட்சத்து 4 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும் 25 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் தொற்றுக்களின் எண்ணிக்கை 1 மில்லியனைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேவேளை உலகளவில் கொரோனா தடுப்பு மருந்துகள் தயாரிப்பு தொடர்பான சில முன்னேற்றகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தடுப்பு மருந்து தயார் நிலையில் உள்ளதாகவும் அடுத்த மாதம் வெளியிடப் படும் என்றும் ரஷ்யா அறிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் இந்த மருந்து ரஷ்யாவில் 3 ஆவது கட்டமாக ஆயிரக் கணக்கான நோயாளிகளிடம் பரிசோதனை செய்யப் படவுள்ளது.

உலகளவில் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்குவதில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜேர்மனி, ஜப்பான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகின்றது. இதில் சில நாடுகளது தடுப்பூசிகளின் சோதனை இறுதிக் கட்டத்தில் இருந்து வருகின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்து கிடைத்து விடும் என அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத் தலைவரும், வாஷிங்டனின் வெள்ளை மாளிகை கொரோனா தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான டாக்டர் அந்தோனி பாசி என்பவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கோவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் மாடர்னா என்ற நிறுவனம் முன்னணி வகிக்கின்றது. மறுபுறம் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பரிசோதனையின் இறுதிக் கட்டத்தை முடித்துள்ளதாகவும் இது தொடர்பில் விரைவில் அறிவிக்கப் படும் என்றும் தெரிவித்திருந்தது. ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் சர்வதேச மருந்துத் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்ட்ராஜெனிகாவுடன் இணைந்து தயாரித்து வரும் மருந்து ChAdOx1 nCoV-19 என்று பெயரிடப் பட்டுள்ளது.

இன்னொரு புறம் சீனாவின் சைனோவேக் என்ற நிறுவனம் பிரேசில் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தடுப்பு மருந்து தயாரித்து வருகின்றது. இம்மருந்து 400 இராணுவ வீரர்களுக்குப் பரிசோதிக்கப் பட்டதாகவும் 2 கட்டங்களாக நடந்த இந்த சோதனையில் வேறு விதமான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.