உலகம்

சமீபத்தில் அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகங்களில் ஆன்லைன் மூலமாக மட்டும் நடத்தப் படும் பாடங்களில் சேர்ந்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு கொண்டு வந்த கட்டுப்பாட்டை பெரும் எதிர்ப்பு ஏற்பட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பெரும் தொற்றுக் காரணமாக ஆன்லைனில் மட்டும் வகுப்புக்குச் சேர்ந்திருந்த சர்வதேச மாணவர்கள் தனிப்பட்ட அறிவுறுத்தலுடன் குறித்த கல்லூரிக்கு மாற்றப் படா விட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என கடந்த வாரம் அமெரிக்க அதிகாரிகள் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்புக்கு இந்தியா உட்பட பல நாடுகள் கடும் எதிர்ப்பை உடனே வெளியிட்டன. மேலும் இந்த உத்தரவினை எதிர்த்து அமெரிக்காவின் பிரபல ஹார்வார்டு மற்றும் மாசாசூசெட்ஸ் போன்ற பல்கலைக் கழகங்கள் உட்பட 59 பல்கலைக் கழகங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கில் குடியேற்றத் துறை சார்பில் அமெரிக்க அதிகாரிகள் ஆஜரான போது வெளிநாட்டு மாணவர்களுக்காக விதிக்கப் பட்ட இந்தப் புதிய கட்டுப்பாட்டை மீளப் பெறுவதாகத் தெரிவித்திருந்தனர். இதன் அடிப்படையில் தான் தற்போது அதிபர் டிரம்ப் இந்த தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக இந்த வருடம் நடப்புக் கல்வியாண்டில் ஹார்வார்டு போன்ற பல பல்கலைக் கழகங்கள் ஆன்லைன் மூலமே பெரும்பாலான வகுப்புக்களைத் தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.