உலகம்

இங்கிலாந்தில் ஏப்பிரல் மத்தியில் இருந்து, ஜூன் இறுதி வரை இலண்டன் பல்கலைக் கழக நிபுணர்கள் மற்றும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வொன்றில் கோவிட்-19 தொற்று லாக்டவுன் காலப் பகுதியிலும், அதற்குப் பின்பும் கிட்டத்தட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் புகைப் பிடித்தலைக் கைவிட்டதாகத் தெரிய வந்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் புகைப் பிடிப்பவர்களை கொரோனா இலகுவில் தொற்றும் என்ற அச்சமே ஆகும் என்றால் ஆச்சரியப் படுவீர்கள். இந்த ஆய்வில் மொத்தம் 11 இலட்சம் பேர் இங்கிலாந்தில் புகைப் பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு விட்டதாகவும், மேலும் 440 000 பேர் இதனைக் கைவிட முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் இங்கிலாந்தில் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை இதை விட 5 மடங்கு அதிகம் என்பது கவலைக்குரிய செய்தி. கொரோனா அச்சத்தைத் தவிர பொது முடக்கம் காரணமாக வீட்டில் முடங்கிய பெரும்பாலான இளைஞர்கள் வீட்டுக்குத் தெரியாது புகைப் பிடிக்க முடியாத காரணத்தாலும் இப்பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர். ஆனால் 41% வீதமானவர்கள் இதற்குக் கூறும் காரணம் கொரோனா தொற்று அச்சம் தான். 2007 இல் UCL என்ற இலண்டன் கல்லூரி தொடங்கிய இந்த ஆய்வில் 2020 இல் தான் மிக அதிகபட்சமானவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இக்கருத்துக் கணிப்பில் மொத்தம் 2.4 மில்லியன் பிரித்தானியர்கள் பங்கு பற்றியுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இடைவிடாத இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவை புகைப் பிடிப்பவர்களுக்கு மற்றையவர்களை விட சற்று அதிகம் இருந்ததும், வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட கொரோனா நோயாளிகளில், புகைப் பிடிப்பவர்கள் மரணிக்கும் வீதம் 1.8% அதிகம் என்றும் உறுதிப் படுத்தப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.