உலகம்

இத்தாலியின் சிசிலித்தீவின் தலைநகர் பலேர்மோவில், கடந்த புதன்கிழமை இரவு கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 1790ம் ஆண்டுக்குப் பின் 200 ஆண்டுகளில் கோடைகாலத்தில் ஏற்பட்ட மிகப் பெரும் வெள்ளமாக பிராந்திய அதிகாரிகள் இதனைப் பதிவு செய்துள்ளனர்.

கடந் புதன் கிழமை இரவு பெய்த கடும் கோடை மழையால், இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு மீட்டருக்கு மேல் பெருவெள்ளம் சேர்ந்தது. இதனால் நகர மையத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கின. இந்தப் வெள்ளத்தில் மூழ்கிய காரொன்றில் தம்பதியினர் சிக்கியதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்த அடிப்படையில், இரண்டு பேர் வெள்ளத்தில் மூழ்கிவிட்டதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆயினும் உள்ளூர் பொலிசார் இப்பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

வெள்ளப் பெருக்கினைத் தொடர்ந்து உடனடியாக மீட்புபப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், மற்றும் காவல்துறையினர், வியாழக்கிழமை அதிகாலை வரையிலான தமது தேடலில், வெள்ளப்பெருக்கு காரணமாக உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் அல்லது கடுமையான காயங்கள் எதுவும் இல்லை, என்பதனை உறுதிப்படுத்தினர். மேலும் வெள்ள நீரை வெளியேற்றும் போது அவர்கள் தொடர்ந்தும் பாதிப்படைந்தவர்களைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த வகை திடீர் மழை பெருவெள்ளத்தை, இத்தாலிய மொழியில் "பொம்பா டி ஆக்வா" (நீர் குண்டு) என்று அழைக்கப்படுகிறது. "இரண்டு மணி நேரத்திற்குள் பலேர்மோவில் ஒரு மீட்டருக்கு மேல் மழை பெய்தது. நகர வரலாற்றில் குறைந்தது 1790 க்குப் பிறகு, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரு வெள்ளம் " என நகர மேயர் லியோலுகா ஆர்லாண்டோ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு நிறுவனம் இப்பகுதிக்கு எந்த வானிலை எச்சரிக்கைகளையும் வெளியிடாத நிலையில் ஏற்பட்ட இப் பெருவெள்ளம், தற்போது வடிந்திருப்பதாகவும், துண்டிக்கபட்ட மின்சார இணைப்புக்கள் மீளவும் பொருத்தப்படுவதாகவும், வெள்ள அனர்த்த பொருளாதார இழப்புக்கள் குறித்த மதிப்பீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப் பணிகளில், இராணுவம் மற்றும், தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து, மக்கள் குழுக்களும், மண் அகற்றுதல் மற்றும் சாலை பழுதுபார்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனிநபர்கள் மற்றும் பொதுச் சேவைகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கும், அவசரநிலையை எதிர்கொள்வதற்கும் விரைவான மற்றும் நெறிப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்க வேண்டுமென மேயர் ஆர்லாண்டோ பிராந்திய மற்றும் தேசிய அரசாங்கங்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.