உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 14 003 699
மொத்த இறப்புக்கள் : 593 899
குணமடைந்தவர்கள் : 8 322 505
ஆக்டிவ் தொற்றுக்கள் : 5 087 295
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 59 966

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 3 699 307 : மொத்த இறப்புக்கள் : 141 168
பிரேசில் : 2 015 382 : 76 846
இந்தியா : 1 020 644 : 25 777
ரஷ்யா : 759 203 : 12 123
பெரு : 341 586 : 12 615
தென்னாப்பிரிக்கா : 324 221 : 4669
மெக்ஸிக்கோ : 324 041 : 37 594
சிலி : 323 698 : 7290
ஸ்பெயின் : 305 935 : 28 416
பிரிட்டன் : 292 552 : 45 119
ஈரான் : 269 440 : 13 791
பாகிஸ்தான் : 259 999 : 5475
இத்தாலி : 243 736 : 35 017
ஜேர்மனி : 201 931 : 9157
பிரான்ஸ் : 173 838 : 30 138
கனடா : 109 264 : 8827
சீனா : 83 622 : 4634
சுவிட்சர்லாந்து : 33 382 : 1969
இலங்கை : 2689 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 40 இலட்சத்து 3 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 5 இலட்சத்து 93 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன.

மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 36 இலட்சத்து 99 ஆயிரத்துக்கும் அதிக தொற்றுக்களும், 1 இலட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் ஏற்பட்டுள்ளன. 2 ஆவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 20 இலட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 76 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

3 ஆவது இடத்தில் காணப்படும் இந்தியாவில் 10 இலட்சத்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 25 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை கொரோனா தடுப்பு மருந்து குறித்த தகவல்களை ரஷ்யா ஹேக்கிங் மூலம் திருட முயல்வதாக இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வைத்த குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது என்றும் கடந்த ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தலின் போது இங்கிலாந்து, அமெரிக்கா இடையே காணப்பட்ட ரகசிய வியாபாரத் தகவல்களை ரஷ்யா திருட முயன்றதாகவும் ரஷ்யா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றச்சாட்டுக்களையும் மறுத்திருந்த ரஷ்யா, இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் என்றும், இவற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்திருந்தது.

கொரோனா தொற்று தொடர்பான இன்னொரு தகவல், இத்தாலியில் கொரோனா பாதித்த சில கர்ப்பிணிப் பெண்களில் சிசுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சில பெண்களின், தொப்புள் கொடி இரத்தம், மற்றும் தாய்ப்பாலில் கொரோனா வைரஸ் இனம் காணப்பட்டுள்ளது.

ஆனால் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகம் இருந்த தாய்மாரிடம் நஞ்சுக் கொடியைத் தாண்டி குழந்தைக்கு வைரஸ் தொற்ற இயலவில்லை என்றும் கூறப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைத் தொடருங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.