உலகம்

தாய்வானில் விசா புதுப்பிப்பிற்கு அனுமதி கோர புதிய ஒன்றிணைந்த சீனா என்ற நெருக்கடியுடனான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும் என அந்நாட்டு அதிகாரிகளுக்கு ஹாங்கொங் அரசு புதிய நிபந்தனை விதித்துள்ளது.

ஆசியாவின் நிதி மையமாக விளங்கும் ஹாங்கொங் மீது சீன அரசு விதித்த புதிய பாதுகாப்பு நடைமுறைகளைத் தாய்பேய் நிர்வாகம் கடுமையாக விமர்சித்து ஹாங்கொங்கில் இருந்து வெளியேற விரும்புவர்களுக்காக தாய்பேயில் புதிய அலுவலகத்தைத் திறந்ததற்கு எதிர் வினையாகத் தான் ஹாங்கொங்கின் சீன அரச நிர்வாகம் இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

இப்புதிய சட்டம் தைவான் மற்றும் ஹாங்கொங் நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்கும் தேவையற்ற நடைமுறை என விமர்சிக்கப் பட்டுள்ளது.
மேலும் தைவானைத் தனது சுய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா எத்தனித்து வருவதால் ஹாங்கொங்கில் இருக்கும் 15 தாய்வான் அதிகாரிகளுக்கும் இப்புதிய சட்டம் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.