உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 14 440 028
மொத்த இறப்புக்கள் : 605 142
குணமடைந்தவர்கள் : 8 625 750
ஆக்டிவ் தொற்றுக்கள் : 5 209 136
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 60 095

நாடளாவிய புள்ளி விபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 3 833 597 : மொத்த இறப்புக்கள் : 142 878
பிரேசில் : 2 075 246 : 78 817
இந்தியா : 1 078 757 : 26 838
ரஷ்யா : 771 546 : 12 342
தென்னாப்பிரிக்கா : 350 879 : 4948
பெரு : 349 500 : 12 998
மெக்ஸிக்கோ : 338 913 : 38 888
சிலி : 328 846 : 8445
ஸ்பெயின் : 307 335 : 28 420
பிரிட்டன் : 294 066 : 45 273
ஈரான் : 271 606 : 13 979
பாகிஸ்தான் : 263 496 : 5568
இத்தாலி : 244 216 : 35 042
துருக்கி : 218 717 : 5475
ஜேர்மனி : 202 572 : 9162
பங்களாதேஷ் : 202 066 : 2581
பிரான்ஸ் : 174 674 : 30 152
கனடா : 109 999 : 8848
சீனா : 83 660 : 4634
சுவிட்சர்லாந்து : 33 492 : 1969
இலங்கை : 2704 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 44 இலட்சத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 6 இலட்சத்து 5 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் மொத்த தொற்றுக்கள் 38 இலட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 1 இலட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன.

2 ஆவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 20 இலட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 78 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 10 இலட்சத்து 78 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 26 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. கோவிட்-19 தடுப்பு மருந்துக்கான மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்து இருக்கும் ரஷ்யா உலகின் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்கக் கூடிய நாடாக மாறியுள்ளது.

உலகளவில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் தயாரித்து வரும் தடுப்பு மருந்து மிகவும் திறன் வாய்ந்தது என உலக சுகாதார அமைப்பு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ரஷ்யா முதல் நாடாக தான் மேற்கொண்ட அனைத்து தடுப்பு மருந்து பரிசோதனைகளின் மூலமும் தனது தயாரிப்பு மிகவும் பாதுகாப்பானது என ஊர்ஜிதமாகி இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இப்பரிசோதனைகள் யாவும் ரஷ்யாவின் செச்செனோவ் மற்றும் மாஸ்கோவின் முதல் மாநில மருத்துவ பல்கலைக் கழகங்களால் மேற்கொள்ளப் பட்டிருந்தன.

மேலும் இந்தத் தடுப்பு மருந்து கமாலி இன்ஸ்டிடியூட் ஆப் எபிடெமாலஜி மற்றும் மைக்ரோபயாலஜி என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்டுள்ளது. இதேவேளை இந்தியாவில் மனிதர்களிடம் கொரோனா தடுப்பூசி பரிசோதனையை எய்ம்ஸ் அமைப்பு நாளை திங்கட்கிழமை தொடங்கத் திட்டமிட்டுள்ளது. ஹைதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனமான என்ஐவி ஆகியவற்றுடன் இணைந்து இந்த கோவாக்ஸின் என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் மனிதர்களுக்கிடையேயான பரிசோதனை 18 முதல் 55 வயதுக்கு உட்பட்ட தன்னார்வலர்களிடம் பரிசோதிக்கப் படவுள்ளது. இந்நபர்கள் பூரண ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.