உலகம்

கொரோனா பெரும் தொற்றின் விளைவாலும், இவ்வருடம் உலகளவில் கிளர்ந்தெழுந்த பாரியளவிலான இனத்துவேசத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் காரணமாகவும் பூகோள அடிப்படையில் ஏற்பட்டுள்ள சமூக சமநிலைத் தளர்வால் உலகம் உடையுறும் கட்டத்தில் உள்ளது என ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியே கட்டரஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னாஸ்பர்க் நகரில் தேசபிதா நெல்சசன் மண்டேலா நினைவு வருடாந்த உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, ஒரு எக்ஸ் ரே போன்று கோவிட் 19 பெரும் தொற்றானது நாம் உருவாக்கி வைத்திருக்கும் சமூகத்தின் பலமற்ற எலும்புகளில் காணப்படும் முறிவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு உலகில் உள்ள எல்லா சமூகங்களதும் தவறான, பிழையான அனைத்து அம்சங்களையும் அது வெளிப்படுத்தியுள்ளது. முக்கியமாக, இலவச சந்தைகள் அனைத்து மக்களுக்குமான சுகாதார வசதியை வழங்கும் என்ற பொய்யினையும், செலவிடப் படாத கவனிப்பு கிடைக்காது என்பது புனைவு என்பதையும், நாம் இனவெறி அற்ற ஒரு உலகில் வாழ்கின்றோம் என்பது ஒரு மாயை என்பதையும், நாம் அனைவரும் ஒரே பாதையில் தான் பயணிக்கின்றோம் என்பது கட்டுக்கதை என்பதையும் இந்த கோவிட் 19 நமக்குத் தெரியப் படுத்தியுள்ளது என்கிறார் அந்தோனியே கட்டரஸ்.

கட்டரஸ் மேலும் கூறுகையில், அபிவிருத்தி அடைந்த நாடுகள் தமது சொந்த வாழ்வாதாரத்துக்கு மட்டுமே மிக உறுதியாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளன என்றும் கொரோனா போன்ற ஆபத்தான காலகட்டத்தில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு தேவைப்படும் அத்தியாவசிய உதவியை நிறைவு செய்வதில் முதலீடு செய்ய இவை தவறி விட்டன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

நிறவெறிக் கட்டமைப்பு நீக்கப் பட்டு 25 ஆண்டுகள் கழிந்தும் உலகில் மிக அதிகளவு சமூக சமிநிலை இன்மை நிலவும் நாடாகத் தென்னாப்பிரிக்கா விளங்குகின்றது. தற்போது கொரோனாவில் உலகில் மிக அதிகளவு பாதிக்கப் பட்ட நாடுகளில் ஒன்றாகவும் மாறியுள்ள தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்காவின் அரைப் பங்கு கொரோனா தொற்றுக்கள் காணப்படுகின்றன. இப்பொழுதே அங்கிருக்கும் அனைத்து பொது மக்கள் வைத்திய சாலைகளும் நிரம்பி வழிகின்றன.

தனிநபரது செல்வ செழிப்பு குறித்தி ஒப்பீடு செய்து பார்த்தால் உலகின் முதல் 26 அதிகபட்ச சொத்துடைய செல்வந்தர்கள் ஏனைய அனைத்து உலகளாவிய சனத்தொகையின் பாதிக்கும் மேற்பட்ட மக்களது மொத்த சொத்தை விட அதிகளவும் பணவசதி உள்ளவர்களாகத் திகழ்கின்றனர். பணவசதி தவிர்ந்த ஏனைய சமூக சமநிலை இன்மைப் பிரிவுகளைப் பார்த்தால் அவை, இனம், பால், வர்க்கம், மற்றும் பிறந்த இடம் போன்றவற்றைக் கூறலாம்.

உலகளாவிய கல்வி நிலையங்களிலும் கூட சமநிலை இன்மைத் தேர்வுகள் காணப் படுவது வருந்தத் தக்கது. எனவே இன்றைய உலகுக்கு புதிய தலைமுறை சமூகப் பாதுகாப்பு அவசியமாகின்றது. இதில் உலகளாவிய சுகாதார வழங்குதல், மட்டுமன்றி உலகளாவிய அடிப்படை வருமானம் போன்ற திட்டங்கள் அவசியம்.

தாழ்ந்த, நடுத்தர வர்க்க நாடுகளுக்கான கல்வி வசதிக்கான பூகோள ஒதுக்கீடு 2030 அளவில் 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக அதாவது இரு மடங்காக அதிகரிக்கப் படுவதும் அவசியம். இவ்வாறு ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

‘20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக தற்போது கருத்து வெளியிடும் ஆளுங்கட்சியினர் இன்னும் சில வருடங்களில் இதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிவரும்.’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சட்டத்தரணி இந்திக்க கால்லகே உயர்நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 

இந்தியாவில் 10 நாட்கள் நடைபெற்ற மாநிலங்களவையின் மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள 3மாடி கட்டிடம் ஒன்று திடிரென இடிந்து விழுந்தது.

கடந்த வியாழக்கிழமை ஐரோப்பிய யூனியன் தலைவர்களை புருஸ்ஸெல்ஸில் சந்தித்த நிலையில், தொடர்ந்து இழுபறியில் இருந்து வரும் பிரெக்ஸிட் விடயத்தில் தொடர்ந்து விளையாட வேண்டாம் என இலண்டனில் இருக்கும் பிரிட்டன் அதிகாரிகளிடம் ஜேர்மனியின் ஐரோப்பா விவகாரங்களுக்கான அமைச்சர் மைக்கேல் றொத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் வடதுருவத்துக்கு அருகே உள்ள கிறீன்லாந்து மற்றும் தென் துருவத்தின் அத்திலாந்திக் கடல் ஆகிய இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் உலக வெப்பமயமாக்கலினால் வேகமாக உருகி வருகின்றன.