உலகம்

சனிக்கிழமை வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் காணப்பட்ட இன்னொரு பிரம்மாண்டமான புத்தர் சிலையை அங்கு பணியாற்றி வந்த கட்டடத் தொழிலாளர்கள் உடைத்தெறிந்துள்ளனர்.

தமது மார்க்கத்துக்குப் புறம்பான உருவச் சிலைகளை அழிப்பது தமது மதநம்பிக்கையின் ஒரு அம்சம் என்பது இவர்களது நம்பிக்கை எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் தொல்லியல் துறைத் திணைக்கள இயக்குனர் அப்துல் சமாத் இது குறித்துக் கூறுகையில், இந்த சிலை உள்ளூர் ஒப்பந்த தாரர் ஒருவர் மற்றும் மேலும் ஐவரால் பூரணமாக சிதைக்கப் பட்டுள்ளது என்றுள்ளார். மேலும் இந்த சிலை 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தாரா பௌத்த நாகரிகத்தைச் சேர்ந்த ஒரு சிலை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்பகுதியின் போலிஸ் அதிகாரிகள் வெளியிட்ட டுவிட்டர் தகவலில், இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் கண்டுபிடிக்கப் பட்டு கைது செய்யப் பட்டிருப்பதாகவும், உடைக்கப் பட்ட சிலையின் பாகங்கள் கைப்பற்றப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சிலை இருந்த இடமும் போலிசாரால் முற்றுகை இடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் 2001 ஆமாண்டு மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானின் பாமியான் பகுதியில், இதுவரை உலகில் காணப்பட்ட மிக உயரமான புத்தர் சிலைகள் சிலவற்றை தலிபான்கள் நிர்மூலமாக்கியதை நினைவூட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தின் பின் இதுவரை பாகிஸ்தானின் ஸ்வாட் பகுதியில் தெஹ்ரிக் இ தலிபான்களால் பல புத்தர் சிலைகள் அழிக்கப் பட்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை பாகிஸ்தானில் புத்தர் சிலை அழிக்கப் பட்ட காட்சிகள் அடங்கிய காணொலி சமூக வலைத் தளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகின்றது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெண் சிறுமிகளின் கல்வி உரிமை தொடர்பான புரட்சியாளரும், மிக இளவயதில் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான பாகிஸ்தானைச் சேர்ந்த தன்னார்வலரான மலாலா யூசுஃப்சாய் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் முற்றி வரும் நிலையில், ஈரான் மீது மீண்டும் பாரிய பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்காவுக்கு உரித்தில்லை என ஐ.நா பாதுகாப்புச் சபையின் ஏனைய முக்கிய உறுப்பு நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகள் தெரிவித்துள்ளன.