உலகம்

Worldometers இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 14 542 542
மொத்த இறப்புக்கள் : 606 964
குணமடைந்தவர்கள் : 8 686 346
ஆக்டிவ் தொற்றுக்கள் : 5 250 264
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 59 942

நாடளாவிய புள்ளிவிபரம் (முக்கியத்துவம் மிக்க நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 3 868 756 : மொத்த இறப்புக்கள் : 143 159
பிரேசில் : 2 076 635 : 78 871
இந்தியா : 1 118 017 : 27 503
ரஷ்யா : 771 546 : 12 342
தென்னாப்பிரிக்கா : 350 879 : 4948
பெரு : 349 500 : 12 998
மெக்ஸிக்கோ : 338 913 : 38 888
சிலி : 330 930 : 8503
ஸ்பெயின் : 307 335 : 28 420
பிரிட்டன் : 294 792 : 45 300
ஈரான் : 273 788 : 14 188
பாகிஸ்தான் : 263 496 : 5568
சவுதி அரேபியா : 250 920 : 2486
இத்தாலி : 244 434 : 35 045
துருக்கி : 219 641 : 5491
பங்களாதேஷ் : 204 525 : 2618
ஜேர்மனி : 202 822 : 9163
கொலம்பியா : 190 700 : 6516
பிரான்ஸ் : 174 674 : 30 152
ஆர்ஜெண்டினா : 122 524 : 2246
கனடா : 110 329 : 8852
சீனா : 83 660 : 4634
சுவிட்சர்லாந்து : 33 591 : 1969
இலங்கை : 2724 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 45 இலட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 6 இலட்சத்து 6 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. மிக அதிகபட்சமாக அமெரிக்காவில், 38 இலட்சத்து 68 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 43 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

2 ஆவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 20 இலட்சத்து 76 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 78 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 11 இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 27 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

இதேவேளை கொரோனா பெரும் தொற்றுப் பாதிப்பு மிகவும் உச்சத்தில் இருக்கும் அமெரிக்காவில் இன்னமும் அனைத்துப் பொது மக்களுக்கும் முகக் கவசம் கட்டாயம் ஆக்குவதில் உடன்பாடில்லாது இருக்கின்றார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அண்மையில் அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு ஒரு போதும் உத்தரவிட மாட்டேன் என்றும் அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு சுதந்திரம் இருப்பது அவசியம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக ஃபாக்ஸ் நியூஸ் ஊடகப் பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

இதற்கு முரணாக சமீபத்தில் கொரோனா பெரும் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் பேசிய வெள்ளை மாளிகையின் தொற்று நோய் நிபுணரான அந்தோனி ஃபாசி மக்கள் முகக் கவசம் அணிவது முக்கியமானது என்றும் இதனை அமெரிக்க மத்திய, மாகாண அரசுகள் கட்டாயம் ஆக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், எல்லாரும் முகக் கவசம் அணிந்து விட்டால் கொரோனா இல்லாது போய் விடும் என்ற கருத்தைத் தான் ஏற்கவில்லை என்றுள்ளார் அதிபர் டிரம்ப்.

கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இரட்டைக் குடியுரிமையுள்ளவர்கள், பாராளுமன்றம் செல்லலாம் என்கிற அரசியலமைப்பு திருத்தமானது பிரிவினை கோரும் புலம்பெயர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களையும் பாராளுமன்றத்துக்கு கொண்டு வரும் சூழலை ஏற்படுத்திவிடும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

20வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இலங்கையில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், பேச்சு மற்றும் தகவல் அறிவதற்கு இருந்து வருகின்ற சுதந்திரத்துக்குத் தீங்கிழைக்கப்பட்டுள்ளது என்று இலங்கையின் ஊடக அமைப்புக்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான விடையை Virologist திரு ஷாஹித் ஜமீல் அவர்களை திரு கரண் தபார் எடுத்த பேட்டியில் இருந்து அறிய முடியும் ICMR தலைவர் திரு பல்ராம் பார்கவா கொரோனாவை நாம் கட்டுக்குள் வைத்துள்ளோம் என கூறியுள்ளார்

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தவிர்க்க முடியாத வகையில் கோவிட்-19 இன் 2 ஆம் அலைத் தாக்கம் ஏற்படும் என்றும் இதைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சாத்தியம் உள்ளது என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தற்போது மாற்று வழிகள் எதுவும் இல்லை என சுவிஸ் மத்திய கூட்டாட்சி அமைப்பின் கூட்டமைப்பின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் மார்ட்டின் அக்கர்மன் தெரிவித்துள்ளார்.