உலகம்

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளிவிபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 15 746 805
மொத்த இறப்புக்கள் : 638 273
குணமடைந்தவர்கள் : 9 599 540
ஆக்டிவ் தொற்றுக்கள் : 5 508 992
மோசமான நிலையில் உள்ளவர்கள் : 66 227

நாடளாவிய புள்ளிவிபரம் : (முக்கியமான நாடுகள் மட்டும்..)

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 4 193 499 : மொத்த இறப்புக்கள் : 147 660
பிரேசில் : 2 292 286 : 84 251
இந்தியா : 1 319 302 : 31 024
ரஷ்யா : 800 849 : 13 046
தென்னாப்பிரிக்கா : 408 052 : 6093
பெரு : 371 096 : 17 654
மெக்ஸிக்கோ : 370 712 : 41 908
சிலி : 338 759 : 8838
ஸ்பெயின் : 317 246 : 28 429
பிரிட்டன் : 294 914 : 45 677
ஈரான் : 286 523 : 15 289
பாகிஸ்தான் : 270 400 : 5763
சவுதி அரேபியா : 262 772 : 2672
இத்தாலி : 245 338 : 35 092
பங்களாதேஷ் : 218 658 : 2836
ஜேர்மனி : 205 392 : 9190
பிரான்ஸ் : 179 398 : 30 182
கனடா : 112 867 : 8877
சீனா : 83 750 : 4634
சுவிட்சர்லாந்து : 34 154 : 1977
இலங்கை : 2763 : 11

இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்த தொற்றுக்கள் 1 கோடியே 57 இலட்சத்து 48 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 6 இலட்சத்து 38 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் காணப்படுகின்றன.

மிக அதிகபட்சமாக அமெரிக்காவில் 41 இலட்சத்து 93 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 1 இலட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. 2 ஆவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 22 இலட்சத்து 92 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 84 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

3 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 13 இலட்சத்து 19 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களும், 31 ஆயிரத்துக்கும் அதிகமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன.

அண்மையில் அஸ்ட்ரா ஜெனாகா நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்து பரிசோதனை ரீதியில் நல்ல முன்னேற்றம் கண்ட கொரோனா தடுப்பூசியை பெருமளவில் தயாரிக்க இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது.

கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியா தயாரிக்கவிருக்கும் இம்மருந்தை இந்த ஆண்டிறுதிக்குள் சுமார் 30 கோடி அதாவது 300 மில்லியன் டோசேஜ் அளவில் தயாரிக்க சீரம் இன்ஸ்டிடியூட் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் மிகவும் குறைந்த விலைக்கு அதாவது 1000 ரூபாய்க்கும் குறைவாகத் தனிநபருக்குக் கிடைக்கும் விதத்திலும் இது உற்பத்தி செய்யப் படவுள்ளது.

இந்த மருந்தின் முக்கிய 3 ஆம் கட்டப் பரிசோதனை அடுத்த மாதம் நடத்தப் படும் என்றும் குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை சீனாவின் சினோவேக் நிறுவனம் தயாரித்து வந்த கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனையும் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்த சினோவேக் நிறுவனம் பிரேசிலின் பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து இம்மருந்தைத் தயாரித்து வந்துள்ளது. மேலும் இதன் இறுதிக்கட்ட சோதனையை 9000 பிரேசில் சுகாதார ஊழியர்களிடம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மருந்து வெற்றியடைந்தால் 12 கோடி டோசேஜ் தயாரிக்கப் படக்கூடும் என்றும் தெரிய வருகின்றது.

கோவிட் 19 பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியக் கீழே இருக்கும் இணைப்பை பின்பற்றுங்கள்...

உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

“சமூகத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்படா விட்டாலும் வைத்தியசாலைகளில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனினும் பொதுமக்கள் இந்த நிலைமைகளை மறந்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் நடந்து கொள்வது பாரதூரமானதாகும்.” என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

தமிழ் மக்களின் நினைவேந்தலுக்கான உரிமையை வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்க தமிழ்த் தேசியக் கட்சிகள் முடிவெடுத்துள்ளன. 

வருகிற அக்டோபர் 5 ஆம் திகதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற பேரவையில் அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து, நெதர்லாந்து, போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கான அனைத்து அத்தியாவசிய பயணங்களையும் தவிர்க்குமாறு, டேனிஷ் வெளியுறவு அமைச்சகம் தனது நாட்டின் பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் 20ஆம் திகதி முதல் டிக்டோக் மற்றும் வீசாட் இரண்டு செயலிகளும் தடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.